பிரம்மாண்டமாக உருவாகும் கலைஞர் நூலகம்.. 3 மாதங்களில் பணிகள் நிறைவு.. அமைச்சர் எ.வ.வேலு திடீர் விசிட்
மதுரை: அடுத்த 3 மாதங்களுக்குள் கலைஞர் நூலக கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, விரைவாக திறந்து வைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரையில் ரூ.114 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணியினை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், தமிழகத்தில் வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாய நிலை வந்துள்ளது. சாலை விரிவாக்கத்திற்காக எத்தனை ஆண்டுகள் பழமைவாய்ந்த மரங்களாக இருந்தாலும் அகற்றபட வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக ஒரு மரத்திற்கு 10 மரங்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மரக் கன்றுகளை வைக்க அமைச்சர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்களை வைக்க ஆந்திராவில் இருந்து மரக்கன்றுகள் வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் விதிகளை மீறி அதிக அளவில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்பது விதி. ஆனால் 60 கிலோ மிட்டருக்கு உட்பட்ட பகுதியில் கூடுதலாக அமைக்கபட்டுள்ள சுங்கச்சாவடிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னையில் நான்கு சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
அதேபோல் கலைஞர் நினைவு நூலாக கட்டுமான பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது உள் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்த பணிகள் நிறைவடையும். ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நூலகத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications