ராத்திரி நேரத்தில்.. காய் வாங்க கடைக்கு போன உமாதேவி.. கழுத்து அறுபட்ட நிலையில் மொட்டப் பாறையில்!
காய்கறி வாங்க சென்ற பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்
மதுரை: காய்கறி வாங்க கடைக்கு போன உசிலம்பட்டி உமாதேவியை.. யாரோ கழுத்து அறுத்து பாறை மேல் போட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் திராவிடமணி. இவரது மனைவி உமாதேவி. 45 வயதாகிறது. திராவிட மணி 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இதனால், பிழைப்புக்காக உசிலம்பட்டி மார்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் உமாதேவி காய்கறி வாங்கி வருவதாகவும், காலையில் வந்துவிடுவேன் என்றும் வீட்டில் சொல்லிவிட்டு நேற்றிரவு கிளம்பி சென்றிருக்கிறார்.
ஆனால் இன்று காலை திரும்பி வரவே இல்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடி வந்த நிலையில், மொட்டப்பாறை என்ற இடத்திற்கு அருகே பாறைகள் நிறைந்த முட்புதரில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விரைந்து சென்று பார்த்ததில், அது காய்கறி வாங்க போன உமாதேவி என்பதுதான் தெரியவந்தது. உமாதேவியின் உடம்பெல்லாம் காயமாக இருந்தது. பாறையின் மேல் பிணமாக கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உமாதேவியை யார் கொலை செய்தார்கள், எதற்காக கொன்றார்கள், என்று தெரியவில்லை. கழுத்தை அறுத்து கொல்லும் அளவிற்கு அவருக்கு விரோதிகள் யார் என்றெல்லாம் தெரியாத நிலையில், உத்தப்பநாயக்கனூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications