2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பெண் காவலர்.. இதுதான் காரணமா?
மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பெண் காவலர் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மதுரை திருப்பாலை அய்யர் பங்களா பகுதியில் சுப்புராஜ் - ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 11 வயதில் மகன், மற்றும் 9 வயதில் மகள் உள்ளனர். ஜெயலட்சுமி மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அவர் தனது குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஜெயலட்சுமி சமீபத்தில் திருச்சி ரயில்வே காவல் நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை தனது இரண்டு குழந்தைகளுடன் ஜெயலட்சுமி இருசக்கர வாகனத்தில் சமயநல்லூர் அருகே தேனூர் ரயில்வே தண்டவாள பகுதிக்குச் சென்றார்.
பின்னர் தனது மகன் காளிமுத்து ராஜா (11), மகள் பவித்ரா (9) ஆகியோருடன் திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அவ்வழியாகச் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு குழந்தைகளுடன் தாய், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மன அழுத்தத்தில் மருத்துவ விடுப்பு கேட்டிருந்த நிலையில், உடனே பணிக்கு வர கட்டாயப்படுத்தியதால் காவலர் ஜெயலட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications