மதுரை கமிஷனர் ஆபீசையே பரபரப்பாக்கிய பெண் போலீஸ் ஏட்டு புகார்.. இப்படியும் நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில், பெண் போலீஸ் ஏட்டு, பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் சந்தானலட்சுமி (29). இவர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நேரில் சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் காவல்துறை வட்டாரத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman police filed a rape complaint in Madurai

சந்தானலட்சுமிக்கு 2007ல் திருமணம் நடந்துள்ளது. மகள் மற்றும் மகன் உள்ளனர். ஆனால் ஏனோ தெரியவில்லை, சந்தானலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் ஓயாத தகராறு. எனவே, விவாகரத்து கேட்டு கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆனால், சந்தானலட்சுமி கணவரோடுதான் வாழ வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார். கணவரோடு சேர்த்து வைக்க பூமிநாதன், ஆறுமுகம் ஆகியோர் உதவியை நாடினாராம், சந்தானலட்சுமி. சாமியார் மூலமாக வசியம் வைத்து, கணவரை சேர்த்து வைப்பதாக கூறி, அவ்விருவரும் சந்தானலட்சுமியிடம் 1.5 லட்சம் பணம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, சாமியார் ஜோதி என்பவரை சந்தானலட்சுமி சந்தித்துள்ளார். அப்போது சாமியார், சந்தானலட்சுமி உடலில் ஏதோ மை போன்ற பொருளை தடவினாராம். இதையடுத்து சந்தானலட்சுமி மயங்கிவிட்டாராம். சுய நினைவு வந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சந்தானலட்சுமி உணர்ந்தாராம்.

இதன்பிறகு, பூமிநாதனின் தந்தை கரந்தமலை போனில் அழைத்து சந்தானலட்சுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கஞ்சா வியாபாரிகளை வைத்து சீரழித்துவிடுவதாக சந்தானலட்சுமிக்கு மிரட்டல் விடுத்தாராம், கரந்தமலை. இந்த சம்பவங்களை குற்றச்சாட்டாக மனுவை தயாரித்து, கமிஷனரிடம் கொடுத்துள்ளார், சந்தானலட்சுமி.

இதையடுத்து, சந்தானலட்சுமியை, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் போலீசார். கமி‌ஷனர் உத்தரவையடுத்து, தல்லாகுளம் போலீசார், குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசைவார்த்தை கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடியில் ஈடுபடுதல், பெண்ணை தவறான உள்நோக்கத்துடன் அணுகுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில், அந்த நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் போலீஸ் ஏட்டு ஒருவரே, கணவருக்கு வசியம் செய்ய, சாமியார் உள்ளிட்ட சிலரை அணுகியதும், இதன் காரணமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+