மதுரையில் தலையாரி சோனியா.. கணவன் வேலை செய்யும் விஏஓ ஆபீஸில்.. ஆடிப்போக வைத்த சம்பவம்
மதுரை: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கெஞ்சம்பட்டியை சேர்ந்த சங்கிலி முருகன் என்பவர் டி.குன்னத்தூரில் கிராம தலையாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சோனியா டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளத்தில் தலையாரியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குடும்ப பிரச்சனையில் கணவர் வீட்டுக்கே வர மறுத்துள்ளாராம். இதனால் ஒரு கட்டத்தில் அவரது அலுவலகத்திற்கே சென்ற சோனியா.. கண் முன்னே எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பேசி தீர்க்காமல் செல்வது சில நேரங்களில் யாருமே எதிர்பார்க்காத அசம்பாவிதங்கள் நடக்கின்றன. சின்ன பிரச்சனையாகவே இருக்கும்.. ஆனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும்.. யார் மீது தவறோ அவர்கள் சென்று தவறை உணர்ந்து, விட்டுக்கொடுத்து சென்றால் எப்போதுமே சிக்கல் வராது.

மாறாக ஈகோ காரணமாக பேசுவது இல்லை.. அதேபோல் மனைவி அல்லது கணவன் இருவரில் யார் விட்டுக்கொடுத்து செல்கிறார்களோ..அவர்களே காலம் முழுவதும் விட்டுக்கொடுத்து செல்லும் நிலையும் சில குடும்பங்களில் ஏற்படுகிறது. இது ஒரு கட்டத்தில் விரக்தியை ஏற்படுத்தி தவறான முடிவுக்கு காரணமாகிறது. மதுரையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கெஞ்சம்பட்டியை சேர்ந்த சங்கிலி முருகன் என்பவர், டி.குன்னத்தூரில் கிராம தலையாரியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சோனியாவுக்கு 34 வயது ஆகிறது. சோனியா டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளத்தில் தலையாரியாக வேலை செய்து வந்தார். சோனியா சங்கிலி முருகன் தம்பதிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிது.
இதன் காரணமாக சங்கிலி முருகன் ஒரு கட்டத்தல் வீட்டுக்கு செல்லாமல், தனது தங்கையின் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகறிது. கணவரை வீட்டுக்கு வருமாறு சோனியா அழைத்துள்ளார். அதற்கு சங்கிலி முருகன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த செப்டம்பர் 19-ந் தேதி டி.குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தலையாரி சோனியா சென்றார். அங்கு அலுவலகத்தில் இருந்த கணவர் சங்கிலி முருகனை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு மீண்டும் அழைத்து உள்ளார். அப்போதும் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது
இதனால் விபரீத முடிவெடுத்த சோனியா, தான் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்துக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சோனியாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சோனியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications