மதுரையில் கல்யாணம் ஆனதை மறைத்து.. 12ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி சீரழித்த இளைஞர் கைது
மதுரை: மதுரை மாவட்டத்தில் ஏற்கெனவே கல்யாணம் ஆனதை மறைத்து 12-ம் வகுப்பு மாணவியைச் சீரழித்த தங்கபாண்டி என்ற கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே தென்பழஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி வயது 27. இவர் அந்த பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2012ம் ஆண்டே திருமணம் முடிந்து அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரால் 17 வயது பெண்ணுக்கு நடந்த கொடுமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மாணவியுடன் பழக்கம்
நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வேலைக்காக செல்லும் தங்கப்பாண்டிக்கு தனது கிராமத்தின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 ம் வகுப்பு மாணவி ஒருவர் பழக்கம் ஆகி உள்ளார்.மாணவியிடம் தனக்கு திருமணம் ஆனதை மறைத்த தங்கப்பாண்டி, மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.

எல்லை மீறல்
இருசக்கர வாகனத்தில் மாணவியை அழைத்துச் செல்வது, மாணவிக்கு கேட்காமலேயே புதுப்புது துணி எடுத்துக் கொடுத்து தன்வசப்படுத்தி உள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியிடம் எல்லை மீற தொடங்கிய தங்கப்பாண்டி, மாணவியை தவறான நோக்கத்தில் அவரை அடிக்கடி தொட தொடங்கினார்.

உடல்நலக்குறைவு
இந்நிலையில் மாணவியின் நடத்தையில் சில சந்தேகங்கள் எழுந்தது. அத்துடன் மாணவிக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. அப்போது மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது, 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்.

தங்கப்பாண்டி கைது
இதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் தங்கப்பாண்டி, கல்யாண ஆசை காட்டி மாணவியை சீரழித்தது தெரியவந்தது. இதையடுத்து இளைஞர் தங்கப்பாண்டியை போக்கோ வழக்கில் கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications