ஜோதிலட்சுமி மீது அப்படி ஒரு வெறி.. 7 இடங்களில் சரமாரி குத்து.. பரிதாப மணிகண்டன்.. சிக்கிய கார்த்திக்

இளைஞரை வெட்டி கொன்ற கள்ளக்காதலன் கார்த்திகை தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: 21 வயசு ஜோதிலட்சுமி மீது அப்படி ஒரு வெறி.. அதனால்தான் அவரது கணவரை 7 இடங்களில் கத்தியால் குத்தி கொன்றுள்ளார் கள்ளக்காதலன் கார்த்திக்!!

விருதுநகர் மேலரத வீதி மாரிமுத்து சந்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. ஒரு தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்றுத் தரும் முகவராக வேலை பார்த்தவர்.. இவருடைய மனைவிதான் ஜோதிலட்சுமி.. 21 வயதாகிறது.. கல்யாணம் ஆகி இரண்டரை வருடங்கள் ஆகிறது.. ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தம்பதிக்குள் நிறைய சண்டை வருமாம்.. கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு வருவதும், பிறகு அது சரியாவதுமாக இருந்திருக்கிறது

ஜோதிலட்சுமி

ஜோதிலட்சுமி

இதனிடையே 6 மாசத்திற்கு முன்பு ஜோதிலட்சுமியின் தந்தை சிவக்குமார் ஒரு விபத்தில் சிக்கினார். அதனால் கப்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளதால், ஜோதிலட்சுமி தன் அப்பாவை கவனித்துக் கொள்வதற்காக கப்பலூர் சென்றார்... கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் அங்கேயே இருந்துவிட்டார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

நேற்று முன் தினம் மணிகண்டன் வேலைக்கு கிளம்பி செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தபோது 2 பேர் அங்கு வந்தனர்.. சமாதானம் பேச உங்களை மாமனார் வீட்டில் அழைத்து வர சொன்னார்கள் என்று சொல்லி மணிகண்டனை கூப்பிட்டனர். மணிகண்டனும் இதை நம்பி அவர்களுடன் கிளம்பி சென்றார்.. கிளம்பும்போது பெற்றோரிடமும் இதை பற்றி சொல்லிவிட்டு போனார்.

பெற்றோர்

பெற்றோர்

காலையில் போன மகன் சாயங்காலம் வரை வீட்டுக்கு எந்த தகவலையும் போன் பண்ணி சொல்லவில்லை.. இதனால் மணிகண்டன் பெற்றோர் அவருக்கு போன் செய்தனர்.. ஆனால் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. நீண்ட நேரம் முயற்சித்தும் ஸ்விட்ச் ஆப் என்றே வரவும் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தனர்... வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு 2 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு ஜோதிலட்சுமியின் அம்மா போன் செய்தார்.

படுகொலை

படுகொலை

அப்போது, மணிகண்டனை யாரோ கொன்றுவிட்டார்கள் என்று சொல்லவும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.. இது பற்றி ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கும் சென்று புகார் தந்தனர்.. உடனடியாக போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, ஒரு தனியார் தோட்டத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு மணிகண்டன் விழுந்து விடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையில் இறங்கினர்.

விருதுநகர்

விருதுநகர்

அப்போதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.. 6 மாசத்துக்கு முன்பு அப்பாவுக்கு உதவி செய்வதாக கப்பலூருக்கு போன ஜோதிலட்சுமிக்கு கார்த்திக் என்பவர் பழக்கமாகி உள்ளார்.. இவர் ஜோதிலட்சுமியின் உறவினர்.. 24 வயதாகிறது.. கள்ளக்காதல் ஆரம்பமாகி விட்டது. அடிக்கடி ஜோதிலட்சுமி வீட்டுக்கு கார்த்திக் வந்து சென்று கொண்டிருந்தார்.. இதனிடையே ஜோதிலட்சுமி விருதுநகரில் உள்ள கணவர் வீட்டுக்கு திரும்பினார்... அப்போதும் ஜோதிலட்சுமி கார்த்திக் உறவு நீடித்தது.

கண்டித்தார்

கண்டித்தார்

மணிக்கணக்கில் போனில் பேசுவதை பார்த்த மணிகண்டன், ஜோதிலட்சுமியை கண்டித்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த ஜோதிலட்சுமி குழந்தையை தூக்கி கொண்டு திரும்பவும் அம்மா வீட்டுக்கே வந்துவிட்டார். இந்த சமயத்தில் கார்த்திக் அங்கு சென்று சென்று ஜோதிலட்சுமியை தனக்கு கல்யாணம் செய்து வைக்கும்படி கேட்டார்.. ஆனால் ஜோதிலட்சுமி பெற்றோர் இதனை ஏற்கவில்லை.

தோட்டம்

தோட்டம்

மாப்பிள்ளையுடன் சமாதானம் பேசி திரும்பவும் மகளை அங்கு அனுப்பி வைத்துவிடுவோம் என்றனர். இந்த பதிலை எதிர்பார்க்காத கார்த்திக் அந்த வீட்டில் இருந்தபொருட்களை சேதப்படுத்திவிட்டு வெளியேறினார். இதற்குபிறகுதான் நண்பர் ஒருவரை அழைத்து கொண்டு மணிகண்டன் மணிகண்டனிடம் நைசாக பேசி வெளியே வரவழைத்துள்ளனர்.. தோட்டத்தில் வைத்து கத்தியால் குத்தி கொலையும் செய்துள்ளனர். மொத்தம் 7 இடங்களில் கத்திக்குத்து இருந்தன.

தலைமறைவு

தலைமறைவு

கார்த்திக் அப்போதும் விடவில்லை.. கோயிலுக்கு போயிருந்த ஜோதிலட்சுமியின் அம்மாவை நேரில் பார்த்து, "உங்க மருமகனை கொன்றுவிட்டேன்.. இப்போவாவது உங்க பொண்ணை கட்டிகொடுங்க" என்று கேட்டுள்ளார்.. இதை கேட்டு அதிர்ச்சியான அவர் சம்மந்திக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உள்ளார். இதெல்லாம் விசாரணையில் பிறகுதான் தெரியவந்தது.. ஆனால், கார்த்திக் மற்றும் அவரது நண்பரையும் காணோம்.. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+