எம்எல்ஏ ஹாஸ்டலுக்கு கூப்பிட்டார் கதிர்காமு.. அங்கிருந்த 3 பேர்.. பதறடிக்கும் பெண்ணின் புகார்
அதிமுக வேட்பாளர் கதிர்மீது இளம்பெண் தேனி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video

பெரியகுளம்: "மயக்க ஊசி போட்டு டாக்டர் கதிர்காமு என்னை பலாத்காரம் செய்துவிட்டார்" என்று பாதிக்கப்பட்ட பெண் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 தினங்களாக அமமுக பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு சம்பந்தப்பட்ட விவகாரம் ஒன்று நடந்து வருகிறது. தன்னை கதிர்காமு பலாத்காரம் செய்துவிட்டார் என்று இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த பெண் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
அந்த புகாரில் கதிர்காமு பற்றி அவர் சொல்லி உள்ளதாவது: "எனக்கு முழங்கால் வலி இருந்தது. அதனால் கடந்த 14.10.2015-ம் தேதி தேனி அல்லி நகரத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வந்த டாக்டர் கதிர்காமுவிடம் சென்றேன். அப்போது எனக்கு அவர் மயக்க ஊசி போட்டார். அதனால் நான் மயங்கி விழுந்துவிட்டேன். அந்த சமயத்தில் டாக்டர் என்னை பலாத்காரம் செய்து விட்டார்.

நியாயம் கேட்டேன்
இது குறித்து அவர்கிட்ட நியாயம் கேட்க போனேன். அப்போது என்னுடைய ஆபாச வீடியோவை எடுத்து வைத்துள்ளதாக சொன்னார். திரும்பவும் ஆசைக்கு இணங்காவிட்டால், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார்.

ஆபாச வீடியோ
இதனை சொல்லியே என்னிடம் பலமுறை உறவு கொண்டார். சம்பவம் நடந்த சில மாதங்களில் கதிர்காமு பெரியகுளம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாகி விட்டார். அதனால் அவரை எளிதாக அணுக முடியவில்லை. ஒருநாள் அவரிடம் பேசும்போது, எனது ஆபாச வீடியோவை தந்துவிடுமாறு கெஞ்சினேன்.

என் மேல ஆசை
கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் எம்எல்ஏ ஆபீசுக்கு சென்று நியாயம் கேட்க சென்றேன். அங்கே மேலும் 3 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். அவர்களும் என் மீது ஆசைப்படுவதாக மிரட்டினார். என் மேல் தங்க தமிழ்ச்செல்வன் ரொம்பவும் ஆசைப்படுவதாகவும், அவரோடு நீ உறவு வைத்துக்கொள் என்றார்.

மிரட்டல்
மேலும் எனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு பற்றி உனக்கே தெரியும். இனிமேல் என்னை தொந்தரவு செய்தால் குடும்பத்துடன் கொளுத்தாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார்". இவ்வாறு அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

3 பிரிவுகளில் வழக்கு
இந்த புகாரின்பேரில்தான் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இனி முறையான, நேர்மையான விசாரணை நடத்தப்பட்டால்தான் இதில் உண்மை தன்மை என்னவென்று தெரிய வரும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications