மதுரை விமானநிலைய சாலையில் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர்கள்.. நடந்த துயரம்
மதுரை: மதுரை விமானநிலைய சாலையில் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்து அரசு பேருந்தின் மீது மோதி இளைஞர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தினர். இந்தவிபத்தில் சிக்கி காயம் அடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Recommended Video

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ராம்குமார், கௌதம் இவர்கள் இருவரும் பெருங்குடியிலிருந்து டூவிலரில் வந்து கொண்டிருந்தனர். டூவீலரை கௌதம்(19) இயக்கிவந்தார். வாகனத்தின் பின்னால் ராம்குமார்(20) அமர்ந்து வந்தார்.

பைக்கினை கெளதம் அதிவேகமாக ஒட்டி வந்துகொண்டிருந்த போது வாகனம் வெள்ளைக்கல் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்பை கடக்க முற்பட்ட போது, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து காரியப்பட்டி சென்ற அரசு பேருந்தை கடக்க முயன்றது.
டூவிலரின் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கௌதம் பேருந்தின் முன்பக்கத்தில் மோதினார். பைக் வேகமாக மோதியதில் தலைக்கவசம் அணியாமல் இருந்த ராம்குமார் மற்றும் கெளதம் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயமடைந்த இருவரும், மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இன்று ராம்குமார்(20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலை பாதுகாப்பு வாரத்தின் இறுதி நாளில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications