அண்ணாமலை செருப்புக்கு Z பிரிவு பாதுகாப்பு? அதிர்ந்து போன காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்!
மதுரை: அண்ணாமலை தனது காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரரை வைத்து காவல் காக்க வைத்ததன் மூலம் இந்திய நாட்டு வீரர்களை கொச்சைப்படுத்தி விட்டதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்ணாமலையின் காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரர் பாதுகாத்த நிகழ்வை தாம் சும்மா விடப்போவதில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கே நேரடியாக கடிதம் எழுதவுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். தனது காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரரை பாதுகாக்க வைத்ததற்காக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் அண்ணாமலைக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது. அண்ணாமலையை பொறுத்தவரை அவருக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்புக்கு பிரச்சனையில்லை என்றும் அப்படியிருக்கும் போது அவருக்கு எதற்கு Z பிரிவு செக்யூரிட்டி வழங்க வேண்டும் என்றும் எனவும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.
நாட்டிற்காக உழைக்கும் வீரர்களுக்கும் பாஜகவும் சரி, அண்ணாமலையும் சரி மரியாதை கொடுக்கவில்லை என விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், சனாதனத்தை வைத்து கடந்த சில நாட்களாக சர்ச்சைகள் நீடித்த நிலையில் இப்போது அண்ணாமலையின் காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரர் காவல் காத்த நிகழ்வை வைத்து சர்ச்சை உருவாக்கியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றின் போது அண்ணாமலை தனது காலணியை கழற்றி வைத்துவிட்டு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications