இந்தியாவில் முதல் முறை.. கட்டிடத்தின் மீது காடு.. பெங்களூரின் 14 மாடி குடியிருப்பு 'மனா ஃபாரெஸ்டா..'
பெங்களூர்: பெங்களூர், சர்ஜாப்பூர் மெயின் ரோட்டில், விப்ரோ கார்பொரேட் அலுவலகம் அருகே அமைந்துள்ள மனா ஃபாரெஸ்டா (Mana Foresta) காட்டில் வாழும் இயற்கை உணர்வை வழங்கும் வகையில், அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயந்திரத்தனமான நகர வாழ்க்கைக்கு இடையே, வனத்திற்கு நடுவே வசிக்கும் உணர்வை யார்தான் விரும்ப மாட்டார்கள். அந்த விருப்பத்தை பூர்த்தி செய்கிறது, மனா ஃபாரெஸ்டா.
சர்ஜாப்பூர் சாலையில் அதிநவீன வகையிலான 3 மற்றும் 4 படுக்கை வசதி கொண்ட குடியிருப்புகளை வழங்குகிறது மனா ஃபாரெஸ்டா. இந்தியாவின் முதலாவது செங்குத்து காடு என்ற பெருமையை இந்த அப்பார்ட்மென்ட்கள் பெறுகின்றன.
14 அடுக்கு மாடி கொண்ட இந்த செங்குத்து காடு அப்பார்ட்மென்டில், 56 வீடுகள் மட்டுமே உள்ளன. அந்த அளவுக்கு வசதியாக அனைத்து அப்பார்ட்மென்ட்களும் கட்டப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்பில் மொத்தம், 225 மரங்கள், 2 வருடங்களுக்கும் மேற்பட்ட 1000 தாவரங்கள், 2500 செடிகள் மற்றும் 350 மீட்டர் பூந்தொட்டிகள் உள்ளன. தானியங்கி முறையில் அனைத்து செடிகளுக்கும், சொட்டு நீர் பாசனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
3 படுக்கை வசதி கொண்ட வீடுகள், (2431 - 2592 சதுர அடி.), 4 படுக்கை வசதி கொண்ட வீடுகள் (3060 - 3323 சதுர அடி) என்ற அளவுகளில் கிடைக்கின்றன.
ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி லேட்ன்ட்ஸ்கேப் பால்கனிகள் உண்டு. 3 பெட் வசதி கொண்ட வீடுகள், ரூ.1.76 கோடி விலையில் ஆரம்பமாகின்றன. 4 பெட் வசதி கொண்ட வீடுகள், 2.2 கோடி விலையில் ஆரம்பமாகின்றன.
நமது நேரத்தில், கிட்டத்தட்ட 90% புதிய காற்று அல்லது பசுமை சூழல் இல்லாமல் வீட்டிற்குள்தான் செலவிடுகிறோம். வீட்டின் உட்புற காற்று ஐந்து மடங்கு அதிகமாக மாசுபடுத்தப்படலாம் என்கிறார்கள். இது பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். சூரிய வெளிச்சம் மற்றும் பசுமை இல்லாமை நம் மனநிலைக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஆகவே, நாம் வாழும் முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். நமது வீடுகள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் திறந்தவெளி இடங்களாக மாற வேண்டும். இதுதான் மனா ஃபாரெஸ்டாவை வித்தியாசமாக வடிவமைக்கும் யோசனைக்கு வழிவகுத்தது. வெளிப்புறங்களை வீட்டிற்குள் கொண்டு வரும் வீடு மனா ஃபாரெஸ்டா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications