56-ம் நாள் கர்நாடகா விவசாயிகள் போராட்டத்தில் 'சித்து’-இன்று முதல் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வருமா?
மண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று 56-வது நாளாக கன்னட விவசாயிகள் போராட்டத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பங்கேற்றார். இதனால் இன்று முதல் தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட வேண்டிய வினாடிக்கு 2,600 கன அடி காவிரி நீர் திறந்துவிடப்படுமா? என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு முதலில் 5,000 கன அடி நீர், பின்னர் 3,000 கன அடிநீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் சொற்ப நீரையே கர்நாடகா திறந்துவிட்டது.

விவசாயிகள் போராட்டத்தில் சித்தராமையா: தமிழ்நாட்டுக்கு சொற்ப நீரையும் தரக் கூடாது; ஒரு சொட்டு நீரையும் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் கர்நாடகா விவசாயிகள் 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று 56-வது நாளாக தொடர்ந்தது. மண்டியா பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநில முதல்வர் சித்தராமையா, விவசாயிகளின் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.
சித்தராமையா பேச்சு: பின்னர் போராடும் விவசாயிகளிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, நான் ஒரு விவசாயி மகன். விவசாயிகளி துயரம் எனக்கு தெரியும். விவசாயிகளின் நலனை அதிகார பலனை அனுபவிக்க பலியிடமாட்டேன். விவசாயிகளுக்கு எதிராக அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கமாட்டோம். எங்களுக்கு அரசு அதிகாரம் என்பதை விட மக்கள், விவசாயிகள் நலனே முக்கியம் என்றார்.

டிகே சிவகுமார் பிடிவாதம்: இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இன்று முதல் வினாடிக்கு 2,600 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை. ஆனால் இதனை ஏற்கவே முடியாது; தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறக்கமாட்டோம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
துரைமுருகன் கண்டனம்: இதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். கர்நாடகாவின் இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லது இல்லை; ஏதோ அண்டை நாட்டுடன் மல்லுக்கட்டுவதைப் போல கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் நடந்து கொள்கின்றனர். இது வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டுக்கு 2,600 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications