சித்தி மீது மோகம்! பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்! மறுத்ததால் ஆத்திரம்! பெண் கொலை வழக்கில் ட்விஸ்ட்
மங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அக்கா மகனான 16 வயது சிறுவனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் விசாரணையில் பகீர் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம், புத்தூர் தாலுகா உப்பினங்கடியை அடுத்த பெர்னே கிராம பஞ்சாயத்துக்குள்பட்ட பிலியூர் கிராமம் உள்ளது.

இங்கு 37 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். திருமணமான இவர் கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு அந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதை பார்த்த அவரது குடும்பத்தினர் உப்பினங்கடி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் மாரடைப்பு ஏற்பட்டு அந்த பெண் இறந்ததாக தகவல்கள் வெளியாகின. எனினும் அந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் எழுவதாக அவருடைய கணவர் புகார் தெரிவித்தார்.
இந்த புகாரை ஏற்ற உப்பினங்கடி போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீஸாருக்கு கிடைத்தது. அதில் பெண்ணின் கழுத்தை நெரித்து யாரோ கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் அந்த பெண்ணின் அக்கா மகனான 16 வயது சிறுவன் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து போலீஸார் சிறுவனிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அந்த சிறுவன்தான் தனது சித்தியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கொலையான பெண்ணும் சிறுவனும் ஒரே வீட்டில்தான் இருந்துள்ளனர். அதாவது சிறுவன் , இறந்த பெண்ணின் அக்காள் மகன் என்பதால் அவரும் தனது சித்தியுடன் பாட்டி வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த சிறுவனுக்கு சித்தி மீது மோகம் ஏற்பட்டது.
கடந்த 16 ஆம் தேதி வீட்டில் அந்த பெண் மட்டுமே தனியாக இருந்துள்ளார். இதுதான் நல்ல நேரம் என்பதை உணர்ந்த சிறுவன், சித்தியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த பெண் , "நான் உனக்கு தாய் போல், நீ செய்வது தப்பு, இரு உன் அம்மா வரட்டும்" என மிரட்டியுள்ளார்.
சித்தி மிரட்டியதால் அஞ்சிய சிறுவன், அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொந்த உறவினர்கள் என்றும் பாராமல் சிலர் இது போன்ற மூர்க்கத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இது போல் சென்னை கொடுங்கையூரில் ஒரு சம்பவம் நடந்தது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் மெர்லின் வேளாங்கண்ணி (55). இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.
இவர்கள் எல்லாம் வேலைக்கு சென்றுவிட்டவுடன் மெர்லின் பகலில் தனியாகவே இருந்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று மெர்லினின் சொந்த தம்பி மகன் அகஸ்டின், தனது நண்பருடன் அத்தையை பார்க்க வந்துள்ளார். 21 வயதான அகஸ்டின் ஐடிஐ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆபாச படங்களை பார்த்து பார்த்து அதற்கு அடிமையாகி நாளடைவில் காமவெறியில் இருந்ததாக தெரிகிறது. இதற்காக தனது அத்தையிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
அப்போது பதறிய அத்தை மெர்லின், அகஸ்டினை கண்டித்ததோடு அவருடைய தந்தையிடம் சொல்லிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அஞ்சிய அகஸ்டின், வெளியே தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என்பதால் நண்பர் சாலமனுடன் சேர்ந்து ஸ்குரூ டிரைவரால் கழுத்தில் குத்தி கொன்றுவிட்டு இருவரும் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications