கர்நாடகா: பஜ்ரங் தள் அட்டூழியம்! இந்து பெண்ணுடன் பேருந்தில் சென்ற முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்!
கர்நாடகா: பஜ்ரங் தள் அட்டூழியம்! இந்து பெண்ணுடன் பேருந்தில் சென்ற முஸ்லிம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்!
மங்களூர்: கர்நாடகா மாநிலம் மங்களூரில் இந்து மதத்தை சேர்ந்த பெண்ணுடன் ஒரே பேருந்தில் பயணித்தார் என்பதற்காக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை பஜ்ரங் தள் எனும் இந்துத்துவா கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூர் அருகே முகமது ஜாஹீர் என்ற 22 வயது இஸ்லாமிய இளைஞர் செவ்வாய்க்கிழமை பேருந்து ஒன்றில் இந்து மதத்தை சேர்ந்த தோழி ஒருவருடன் ஒரே சீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டே பயணம் செய்தார். அந்த தோழி பெல்தங்கடி என்ற இடத்தில் பேருந்தில் இருந்து இறங்கினார்.

முகமது ஜாஹீர் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது மற்றொரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கும்பல் அவரை கீழே இறக்கிவிட்டு சரமாரியாக தாக்கியது. இதில் ஜாஹீர் மிக மோசமாக பாதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜாஹீரை எஸ்டிபிஐ நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்தனர். இது தொடர்பாக போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த நிதேஷ், சச்சின், தினேஷ் மற்றும் அவினேஷ் ஆகியோரை கைது செய்தது.


Click it and Unblock the Notifications
