For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- கோட்டாட்சியர்

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை மயிலாடுதுறை கோட்டாட்சியர் நீக்கினார். இதனால் வரும் மே 22 ஆம் தேதி பட்டினபிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Recommended Video

    #BREAKING தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கான தடை நீக்கம்!

    தருமபுரம் ஆதீனத்தில் பல 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பட்டினபிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது இந்த வழக்கத்தை குரு பூஜை என சொல்லப்படுகிறது.

    குருபூஜையின் போது குருவை பல்லக்கில் அமர வைத்து சிஷ்யர்கள் தூக்கி செல்வார்கள். மனிதனை மனிதனே தூக்கி செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்துள்ளது.

    குளிரப்போகும் மனம்குளிரப்போகும் மனம்".. அதிகரிக்கும் நெருக்கடி.. ஆதீனத்திற்கு அனுமதி தருமா திமுக அரசு? என்ன நடக்கும்?

    இந்து அமைப்புகள்

    இந்து அமைப்புகள்

    இந்த தடையை நீக்க கோரி இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகளும் திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த பிரச்சினை சட்டசபையிலும் எதிரொலித்தது. என் உயிரே போனாலும் இந்த பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தியே தீருவேன் என மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார்.

    முதல்வருடன் ஆதீனங்கள் சந்திப்பு

    முதல்வருடன் ஆதீனங்கள் சந்திப்பு

    இந்த நிலையில் பல்வேறு ஆதீனங்கள் நேற்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆதீனங்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி இந்த ஆண்டு சுமூகமாக நடைபெற வேண்டுகோள் விடுத்தோம்.

     ஆன்மீக உள்ளங்கள்

    ஆன்மீக உள்ளங்கள்

    ஆதீனமும், ஆன்மீக உள்ளங்களும் எந்தவித கவலையும் கொள்ளாமல் இருக்கும் வகையில் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் என்றார். இந்த நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடந்த குடமுழுக்கு நிகழ்ச்சியில் தருமபுரம், திருவாவடுதுறை, செங்கோல் மற்றும் தொண்டை மண்டல ஆதீனங்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

     கோட்டாட்சியர் தடை நீக்கம்

    கோட்டாட்சியர் தடை நீக்கம்

    அப்போது பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்திக் கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் பேட்டி அளித்திருந்தார். இதனால் பட்டினப்பிரவேசம் மீதான தடை நீக்கப்படும் என தெரிய வந்தது. அதன்படி வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி மீதான தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் ஆதீனங்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் எதிர்ப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    English summary
    Mayiladudurai RTO Balaji removes ban for Dharmapuram Pattina Pravesam function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X