பயங்கர சத்தத்துடன்.. தொப்பென விழுந்த கட்டிடம்.. 11 பேர் உடல் நசுங்கி பலி.. அதிர்ச்சியில் மும்பை..!
மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் பலியானார்கள்
மும்பை: கனமழை காரணமாக, மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
கேரளாவில் பருவமழை கடந்த 3ம் தேதி தொடங்கியது... எனவே 10ம் தேதி அதாவது இன்றைய தினம் மகாராஷ்டிராவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது.
ஆனால், ஒரு நாள் முன்னதாக நேற்றே பருவழை மும்பையில் தொடங்கி விட்டது... தானே, பால்கரில் கனமழை கொட்டி தீர்த்தது..

கனமழை
நேற்று காலை 8 மணி வரையுள்ள 24 மணி நேரத்தில் கொலாபாவில் 77.4 மி.மீட்டர், சாந்தாகுரூசில் 59.6 மிமீ மழை பெய்ததாக பதிவானது. மும்பையில் பெய்த கனமழையால், ஒரேநாளில் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.. இதனால் மக்கள் தத்தளித்துவிட்டனர்.. அதேபோல, சாலைகள், ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது..

மாடிகள்
இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், பஸ், ரயில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட் கட்டிடம் அப்படியே இடிந்து மளமளவென விழுந்து விபத்துக்குள்ளானது... 2 மாடிகள் கொண்ட கட்டிடம் அது.. இந்த கட்டிட விபத்தில், 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்...

சடலங்கள்
தற்போது, கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் 2 பேர் சிக்கி உயிரிழந்தனர்.. அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது... கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.. இதனால், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன..

அமைச்சர்
8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததுமே மகாராஷ்டிர அமைச்சர் அஸ்லாம் ஷைக் நேரில் வந்து ஆய்வு செய்தார்.. மும்பையில் பெய்த கனமழை காரணமாகவே கட்டிடம் இடிந்து உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடப்பதாகவும் தெரிவித்தார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications