ஷாக்! மருத்துவமனையில் குவியல் குவியலாக சிசுக்களின் எலும்புக்கூடுகள்.. மிரண்ட போலீசார்- நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர மருத்துவமனை ஒன்றின் பயோகேஸ் டேங்கில் 11 சிசுக்களின் மண்டை ஓடுகள், 56 எலும்புகள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்திலுள்ள அர்வி என்ற பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்த போது தான் போலீசார் அதிர்ச்சியின் உச்சத்துக்குச் சென்றுவிட்டனர்.

இந்தச் சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவின் அர்வி பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 13 வயது சிறுமி ஒருவருக்குச் சட்டத்துப் புறம்பாகக் கருக்கலைப்பு செய்யப்படுவதாக அம்மாவட்ட போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அம்மாவட்ட போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு இருந்த மருத்துவமனைக்குச் சொந்தமான பயோகேஸ் தொழிற்சாலையிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

56 எலும்புக்கூடுகள்

56 எலும்புக்கூடுகள்

அங்கிருந்த பயோகேஸ் தொட்டியை ஆய்வு செய்த போது உள்ளே இருந்த எலும்புக்கூடுகளைக் கண்டு போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பயோகேஸ் தொட்டிக்குள் இறங்கிய போலீசார், அந்த எலும்புக்கூடுகளை வெளியே எடுத்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால், ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 11 சிசுக்களின் மண்டை ஓடுகள், 56 எலும்புகள் ஆகியவற்றை போலீசார் அந்த பயோகேஸ் தொட்டியில் இருந்து எடுத்துள்ளனர். இதையடுத்து அவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கருக்கலைப்பு?

சட்டவிரோத கருக்கலைப்பு?

இவை சட்டப்பூர்வமாக நடத்தப்பட்ட கருக்கலைப்பின் எலும்புகளா அல்லது சட்டவிரோத கருக்கலைப்பின் எலும்புகளா என்பது குறித்து போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 13 வயது சிறுமிக்குச் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ததாக அந்த மருத்துவமனையின் மருத்துவர் ரேகா கதம் மற்றும் செவிலியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல சிறுமியைக் கர்ப்பமாக்கிய 11 வயது மைனர் சிறுவனின் பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்,

என்ன நடந்தது

என்ன நடந்தது

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறுமியைக் கர்ப்பமாக்கிய மைனர் சிறுவனின் பெற்றோரைக் கைது செய்துள்ளோம். அவர்கள் சிறுமியின் பெற்றோரைக் கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டியுள்ளனர். அப்படிச் செய்யவில்லை என்றால் இதை வெளியே சொல்லிவிடுவோம், இது உங்களுக்கும், உங்கள் மகளுக்கும் தான் கெட்ட பெயரைத் தரும் என மிரட்டியுள்ளனர். இதற்குத் தேவையான பணத்தையும் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளோம்" என்றார்.

போலீசார்

போலீசார்

இது தொடர்பாக மருத்துவர் ரேகா கதம் என்பவரும் செவிலியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மைனர் சிறுமிக்குக் கருக்கலைப்பு செய்யும்போது போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக அரசின் விதிகள் எதையும் அவர் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்யப்பட்டவையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+