அடப்பாவிகளா.. காருக்குள்ளேயே 17 வயது சிறுமியை.. 2 டிரைவர்களும் அதிரடி கைது.. மும்பை கொடுமை!
17 வயது சிறுமியை ஓடும் காரில் 2 டிரைவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்
மும்பை: ஊரடங்கு நேரத்தில் உதவி என்று கேட்டு சென்ற இளம்பெண்ணை, 2 டாக்சி டிரைவர்கள் ஓடும் வண்டியிலேயே பலாத்காரம் செய்த கொடுமை மும்பை அருகே நடந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 17 வயது... கடந்த நவம்பர் மாசம், வீட்டில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் மும்பைக்கு ஓடிவந்துவிட்டார்.. அதன்பிறகு சொந்த ஊர் செல்ல முடியவில்லை. எனவே, ஒரு ஹோட்டலில் வேலை பார்த்தார்.

அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த 18 வயது சிறுவனுடன் காதல் ஏற்பட்டது. 2 பேருமே காதலித்து வந்த நிலையில், ஒருநாள் திடீரென அந்த ஓட்டலின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான் அந்த சிறுவன்.
இது சம்பந்தமாக விசாரணை ஆரம்பமானது.. தன் மகன் சாவுக்கு சிறுமிதான் காரணம் என்று புகார் தரப்பட்டது.. அதனால் சிறுமியை கைது செய்தது போலீஸ். 17 வயசு என்பதால், சிறுவர் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தனர்.. ஆனால் அங்கு போனதில் இருந்தே உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தனர்.
அதற்குள் கொரோனா பாதிப்பு மும்பையில் அதிகமாகிவிட்டது.. லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், திடீரென சிறுமி தப்பித்து ஓடி வந்துவிட்டார்... அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை காணாமல் தேடி வந்தனர். அதற்குள் சிறுமி புனேவுக்கு போகலாம் என்று பஸ் ஸ்டாண்ட் வந்தார்.. ஆனால் கையில் காசு இல்லாததாலும், பஸ் எதுவும் ஓடாததாலும், ரோட்டில் சென்ற சில டாக்ஸி டிரைவர்களிடம் உதவி கேட்டார்.
அந்த டாக்சி டிரைவர்களும் புனேவில் இறக்கி விடுவதாக சொல்லி காரில் ஏற்றி கொண்டனர். ஆனால், வழியிலேயே இருவரும் மாறி மாறி பெண்ணை பலாத்காரம் செய்தனர். அவர்களிடமிருந்து தப்ப முடியாமல் சிறுமி அலறினார்.. அப்போது ரோட்டில் போலீசார் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும், அவர்களை நோக்கி சத்தம் போட்டு கூப்பிட்டார்.. இதையடுத்து, போலீசார் அந்த காரை விரட்டி பிடிக்க ஆரம்பித்தனர்.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காரின் அடையாளங்களை டிரேஸ் செய்தனர்.. இறுதியில் மும்ப்ரா பகுதியில் அந்த காரை மடக்கி பிடித்துவிட்டனர்.. காருக்குள்ளிருந்த சிறுமியையும் மீட்டனர். இதையடுத்து 2 டாக்சி டிரைவர்களையும் போலீசார் கைது செய்தனர். வீட்டை விட்டு வயசு பெண்கள் வெளியே வந்தால், எத்தகைய அபாயத்தில் சிக்கி கொள்வார்கள் என்பதை பல சம்பவங்கள் இதற்கு முன்பு உணர்த்தி வந்தாலும், தொடர்ந்து இப்பெண்கள் சீரழிந்து வருவது கவலையை தந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications