Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசையாக ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் வயிற்று வலியால் பலி.. மருத்துவமனைக்கு சென்றும் பலனில்லை! ஷாக்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தெருவோர கடை ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடந்த சில காலமாகவே ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடும் போது திடீரென மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. ஹோட்டல்களில் உணவுகளை முறையாகச் சமைக்காமல் வாடிக்கையாளர்களுக்குத் தருவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

19 year old Mumbai man dies After Eating Chicken Shawarma Food poisoning suspected

குறிப்பாக அசைவ உணவுகளைச் சுகாதாரமற்ற முறையில் வைத்திருப்பதாலும் அதை முறையாகச் சமைக்காமல் வாடிக்கையாளர்களுக்குத் தருவதாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதனால் புட் பாய்சனிங் ஏற்பட்டு உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஷவர்மா: அப்படியொரு ஷாக் சம்பவம் தான் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடந்துள்ளது. அங்கு 19 வயது இளைஞர் ஒருவர் தெருவோர கடையில் ஆசையாக ஷவர்மா சாப்பிட்டுள்ளார் அதைச் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அந்த ஷவர்மாவை விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த அந்த நபர் பிரதமேஷ் போக்சே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கடந்த மே 3ஆம் தேதி ட்ரோம்பே பகுதியில் உள்ள ஒரு கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். அதற்கு மறுநாள் அதாவது மே 4ஆம் தேதியே அந்த நபருக்கு பிரதமேஷுக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை: உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நபர் மருத்துவச் சிகிச்சை பெற அருகிலுள்ள ஒரு நகராட்சி மருத்துவமனைக்குச் சென்று இருக்கிறார். இருப்பினும், அவரது உடல்நிலை சீராகவில்லை. வீடு திரும்பி பிறகும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.. இதையடுத்து மீண்டும் அவரை அவரது குடும்பத்தினர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கும் அவருக்குச் சிகிச்சை தரப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.

ஆனால், மறுநாளே அந்த நபரின் உடல்நிலை மிக மோசமான நிலைக்குச் சென்றதால் அவர் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நிலைமை மோசமாக இருந்ததால் அவர் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழப்பு: அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் ஐபிசி 336 மற்றும் 273 கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அந்த நபருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை தரப்பட்ட போதிலும் அவரது உடல்நிலை சீராகவில்லை. அவர் சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை: இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த ஷவர்மா கடையை நடத்தி வந்த ஆனந்த் காம்ப்ளே மற்றும் அகமது ஷேக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு ஷவர்மா தான் காரணமா இல்லை வேறு எதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+