Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாக்பூரில் 2 சிறுவர்களுக்கு HMPV பாதிப்பு.. இந்தியாவின் மொத்த பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு..

Subscribe to Oneindia Tamil

மும்பை: சீனாவில் வேகமாக பரவி வரும் எச்எம்பிவி பாதிப்பு நம் நாட்டிலும் நுழைந்துள்ளது. நேற்றைய தினம் கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத்தில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 2 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டில் எச்எம்பிவி-யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 7 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் தற்போது எச்எம்பிவி எனும் ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கான அறிகுறியுடன் இந்த பாதிப்பு என்பது ஏற்பட்டு வருகிறது. இதனால் சீனாவில் பல மருத்துவமனையில் கூட்டம் அலைமோதி வருகிறது.

hmpv virus hmpv

இந்நிலையில் தான் இந்த எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு என்பது நம் நாட்டிலும் பரவ தொடங்கி உள்ளது. நேற்றைய தினம் கர்நாடகாவில் 2 பேர், குஜராத்தில் ஒருவர், தமிழ்நாட்டில் 2 பேர் என்று மொத்தம் 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 மற்றும் 12 வயது குழந்தைகளுக்கு எச்எம்பிவி பாதிப்பு என்பது உறுதியாகி உள்ளது. அதாவது கடந்த 3ம் தேதி 2 சிறுவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காய்ச்சல் மற்றும் சளியால் அவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். இருவருக்கும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் தான் தற்போது அவர்களுக்கு எச்எம்பிவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.

நாக்பூரில் 2 சிறுவர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் எச்எம்பிவி-யால் தாக்கியவர்களின் எண்ணிக்கை என்பது 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி கர்நாடகாவில் 2 மாத குழந்தை, 8 மாத குழந்தை என்று 2 பேரும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாத குழந்தை, தமிழ்நாட்டில் சென்னையில் 2 குழந்தைகள் என்று மொத்தம் 5 பேர் பாதிக்கப்பட்டனர். அந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று 7 மற்றும் 12 வயது குழந்தைகளுக்கு எச்எம்பிவி பாதிப்பு என்பது உறுதியாகி உள்ளது. இப்படியாக மொத்தம் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு மகாராஷ்டிரா மாநிலம் என்பது குஜராத், கர்நாடகாவுடன் எல்லைகளை பகிர்ந்து வருகிறது. ஏற்கனவே குஜராத் மற்றும் கர்நாடகாவில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை உஷாராகி உள்ளது. மாநிலத்தில் மேற்கொண்டு எச்எம்பிவி பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைளை தொடங்கி உள்ளது.

இந்த எச்எம்பிவி வைரஸ் என்பது புதிய வைரஸ் இல்லை. இது கடந்த 2001ம் ஆண்டிலேயே நெதர்லாந்தில் பரவ தொடங்கியது. இது கொரோனா அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இது ஒரு சீசன் வைரஸ். அதாவது குளிர் மற்றும் பனிக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும் தன்மை கொண்டது. தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்பட பலர் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+