Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதவிய ‛கூகுள்’.. 20 நாளில் மொத்த குடும்பமும் காலி! 5 பேரை கொன்ற 2 பெண்களின் ‛தாலியம்’ யுக்தி -ஷாக்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் 20 நாளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து இறந்த நிலையில் அவர்களை கூகுள் உதவியுடன் திட்டமிட்டு தாலியம் எனும் ‛ஸ்லோ பாய்சன்' வைத்து கொலை செய்ததாக அதே குடும்பத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் 20 நாட்களுக்குள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திய நிலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

 2 women killed 5 people from same family in Maharashtra With the help of Google and Thallium

5 பேர் கொலை: அதாவது 5 பேரின் உணவிலும் ‛ஸ்லோ பாய்சன்' கலந்து கொடுத்து அதே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் தீர்த்து கட்டி நாடகமாடிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 5 பேரையும் தீர்த்து கட்டியது எப்படி என்பது பற்றிய நடுங்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காதல் திருமணம்: மகாராஷ்டிரா மாநிலம் கத்சிரோலி அருகே உள்ள மகாகான் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி விஜயா. இந்த தம்பதியின் மகன் பெயர் ரோஷன். மகள் பெயர் கோமல். இவர்களுடன் விஜயாவின் சகோதரி வர்ஷா வசித்து வருகிறார். இந்நிலையில் தான் ரோஷன் சங்கமித்ரா என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு சங்கமித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சங்கமித்ரா தனது வீட்டை விட்டு வெளியேறி ரோஷனை திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் 2022 டிசம்பர் மாதம் நடந்தது.

பெற்றோர் பலி: திருமணத்தை தொடர்ந்து சங்கமித்ரா தனது கணவர் ரோஷன் மற்றும் அவரது குடும்பத்துடன் மகாகான் பகுதியில் வசிக்க தொடங்கினார். இந்நிலையில் தான் கடந்த மாதம் 20ம் தேதி ரோஷனின் தந்தையான சங்கர் மற்றும் தாய் விஜயா ஆகியோர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடல் வலி, நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவே விஷமாக மாறியதால் அவர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 26ம் தேதி சங்கர் இறந்தார். அதன்பிறகு அதே நாளில் சங்கரின் மனைவி விஜயாவும் இறந்தார். இதனால் அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்துப்போனது.

அடுத்ததாக 3 பேர் பலி: இதையடுத்து ரோஷன் மற்றும் அவரது சகோதரிகளான கோமல், வர்ஷா ஆகியோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்கள் அடுத்தடுத்து இறந்தனர். கோமல் அக்டோபர் 8 ம் தேதியும், மற்ற 2 பேரும் அக்டோபர் 14ம் தேதியும் இறந்தனர். இதன்மூலம் 20 நாட்களுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2 பெண்கள் கைது: மேலும் சந்தேகங்களும் எழுந்தது. இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையின்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது காதல் திருமணம் செய்து வந்த சங்கமித்ரா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 5 பேரை திட்டமிட்டு விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. அதோடு சங்கமித்ராவுக்கு ரோஷனின் தாயின் அண்ணியான ரோசா உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து சங்கமித்ரா, ரோசா ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்தனர்.

பிரச்சனை ஏன்: அப்போது தான் இருவரும் சேர்ந்து 5 பேரையும் கொலை செய்தது ஏன்? எப்படி கொலை செய்தனர்? என்பது பற்றிய ஷாக் தகவல் வெளியானது. அதாவது சங்கமித்ரா தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ரோஷனை காதல் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சங்கமித்ராவை அவரது குடும்பத்தினர் சேர்த்து கொள்ளவில்லை. இதற்கிடையே தான் சமீபத்தில் அவரது தந்தை இறந்தார். இதில் சங்கமித்ரா மிகவும் மனம் உடைந்து போனார். அதோடு சில வாரங்களுக்கு முன்பு வந்த ரக்சா பந்தன் கொண்டாட்டத்தின்போது தனது சகோதரரை பார்க்க செல்ல வேண்டும் என சங்கமித்ரா கணவர் ரோஷனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரும், அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரோஷன், சங்கமித்ராவை தாக்கியுள்ளார்.

 2 women killed 5 people from same family in Maharashtra With the help of Google and Thallium

கூட்டு சேர்ந்த ரோசா: இதனால் சங்கமித்ரா மனம் நொந்து போனார். மேலும் அவர் தனது வீட்டுக்கு வெளியே அழுதபடி இருந்துள்ளார். இந்த வேளையில் தான் ரோஷனின் உறவினரான ரோசா அங்கு வந்துள்ளார். அவர் சங்கமித்ராவிடம் பேசியுள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சங்கமித்ரா கண்ணீர் மல்க அவரிடம் கூறியுள்ளார். அந்த சமயத்தில் ரோசாவும் எனது கணவருக்கு சேர வேண்டிய சொத்துகளை ரோஷனின் தாய் மற்றும் அவரது சகோதரிகள் பங்கீட்டு கொண்டுள்ளனர் என தனது கதையை கூறியுள்ளார்.

கூகுளில் கிடைத்த ஸ்லோ பாய்சன்: இதையடுத்து தான் இருவரும் ரோஷன் மற்றும் அவரது குடும்பத்தை தீர்த்து கட்ட திட்டமிட்டனர். மேலும் போலீசில் சிக்கிக்கொள்ளாமல் கொலை எப்படி செய்வது என அவர்கள் கூகுளில் தேடிப்பார்த்தனர். அப்போது தான் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியவந்துள்ளது. அதாவது தாலியம் (ஆர்சனிக் போன்ற ஸ்லோ பாய்சன்) எனும் ‛ஸ்லோ பாய்சனை' உணவில் கலந்து கொடுத்தால் அவர்கள் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுவார்கள் என்பதும், தங்கள் மீது சந்தேகம் எதுவும் வராது என்பதையும் தெரிந்து கொண்டனர்.

உணவில் கலந்து கொடுத்து கொலை: இதையடுத்து இருவரும் தெலங்கானா சென்று தாலியம் வாங்கி வந்தனர். அதன்பிறகு சங்கமித்ரா தான் சாப்பிடும் உணவை தவிர மற்றவர்களின் உணவில் தாலியம் எனும் ‛ஸ்லோ பாய்சனை' அவ்வப்போது கலக்கி கொடுத்து வந்துள்ளார். இந்த ஸ்லோ பாய்சன் கடந்த மாதம் வேலையை காட்டிய நிலையில் தான் அடுத்தடுத்து 5 பேரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. தற்போது சங்கமித்ரா மற்றும் ரோசா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+