அந்தரங்க உறுப்பில் இருந்த பிளேடு.. பெற்றோருக்கு பயந்து இளம்பெண் செய்த செயல்.. பின்னணியில் பகீர்
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்டோ டிரைவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ள இளம்பெண், வீட்டில் பெற்றோர் திட்டி அடிப்பார்கள் என்று அந்தரங்க உறுப்பில் ஆபரேஷனுக்கு பயன்படுத்தப்படும் பிளேடை வாங்கி சொருகி உள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கோரிகான் பகுதியில் உள்ள ராம் மந்தீர் ரயில் நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணை மீட்டனர்.
அப்போது வயிற்றுக்கு கீழ் பகுதியில் அவருக்கு காயம் இருந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டது.

அந்த இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து ஆபரேஷனுக்கு பயன்படுத்தப்படும் பிளேடு, கற்கள் நீக்கப்பட்டன. மேலும் தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இளம்பெண்ணின் உடலில் இருந்த காயத்தை வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி மயக்க நிலையில் இருந்தார். இதனால் உடனடியாக போலீசாரால் அவரிடம் விசாரிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் காத்திருந்தனர். இளம்பெண்ணுக்கு மயக்கம் தெளிந்த பிறகு அவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த மாணவி, ‛‛நான் ஒரு அனாதை. என்னை ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்'' என்று கூறினார்.
இதையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவரை தேட தொடங்கினர். அதோடு ஆட்டோ டிரைவர் பற்றிய கூடுதல் தகவல்களை போலீசார் அவரிடம் பெற முடிவு செய்து விசாரித்தனர். இந்த சமயத்தில் இளம்பெண் சொன்ன தகவல் என்பது முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இதனால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து ஆபரேஷனுக்கு பயன்படுத்தப்படும் பிளேடு மற்றும் கற்கள் அகற்றப்பட்டுள்ளது. இந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்கிறார். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது கடந்த வாரம் இளம்பெண் மகாராஷ்டிராவின் விரார் பகுதியில் உள்ள அர்னாலா பீச்சுக்கு ஆட்டோ டிரைவருடன் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அறை எதுவும் கிடைக்கவில்லை. உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அறை வழங்கப்படவில்லை. இதையடுத்து அந்த இளம்பெண் பீச்சில் தங்கி உள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஓடியதாக தெரிவித்துள்ளார்.
அதோடு பெற்றோருக்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடும் என்பதால் அந்த இளம்பெண் புதிதாக ஆபரேஷன் பிளேடு வாங்கி அந்தரங்க உறுப்பில் வைத்துள்ளார். அதேபோல் கற்களையும் வைத்துள்ளார். அதன்பிறகு அப்படியே அவர் ராம் மந்திர் ரயில் நிலையத்தில் வந்து மயங்கி உள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவரை கைது செய்துள்ளோம். அவரது பெயர் ராஜ் ரத்தன் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இன்னும் குழப்பம் உள்ளது. இதுபற்றி இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் பெற்றோர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதில் உண்மை இல்லை. அவரின் பெற்றோர் உயிருடன் தான் உள்ளனர். ஒருநாள் இரவு முழுவதும் வீட்டுக்கு வராமல் போனது தொடர்பாக கேள்வி கேட்டு அடிப்பார்கள் என்ற அச்சத்தில் அவர் இப்படி நடந்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த இளம்பெண் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2023ம் ஆண்டில் நிர்மல் நகர் மற்றும் சிவாஜி நகர் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 2 பாலியல் புகார் செய்யப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications