Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நெஞ்சே நடுங்குதே".. வெறிக்க வெறிக்க பார்த்து.. வெறும் "கர்சீப்"பாலேயே அதிரவைத்த பெண்.. அட கொடுமையே

பெண் குழந்தையை கொன்ற பெற்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நாளுக்கு நாள் வடமாநிலங்களில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களும், பெண்கள் மீதான தாக்குதல்களும் மக்களை நிலைகுலைய வைத்து வரும் நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

3 மாதத்துக்கு முன்பு, உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. ஹமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் குஸ்மா.. இவரது கணவர் பெயர் நீரஜ் ப்ரஜாப்தி.. கல்யாணம் ஆகி 10 வருடமாகிறது..

இந்த தம்பதிக்கு ப்ரான்ஷி என்ற 7 வயதிலும், ஆர்த்தி என்ற 2 வயதிலும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. முதல் குழந்தையே ஆணாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர் நீரஜ்ஜூம், அவரது பெற்றோரும்..

 அந்தரங்க உறுப்பு

அந்தரங்க உறுப்பு

ஆனால், பெண்ணாக பிறந்துவிட்டதால், அடுத்த குழந்தை ஆணாக பிறக்கும் என்று நம்பினார்கள்.. 2 வருடத்துக்கு முன்பு பிறந்த குழந்தையும் பெண்ணாகவே பிறந்துவிட்டதால், நீரஜ் குடும்பத்தினரின் மொத்த கோபமும் குஸ்மா மீது திரும்பியது.. ஆண் குழந்தையை ஏன் பெற்று தரவில்லை? என்று கேட்டு அடித்து தாக்கி உள்ளனர்.. அப்போதும் ஆத்திரம் தீராமல், குஸ்மாவின் அந்தரங்க உறுப்புகளை மிக கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள் குடும்பத்தினர். அதுமட்டுமல்ல, அந்த 2 பெண் குழந்தைகளை படிக்க வைக்க முடியாது என்று சொல்லிவிட்டனர்.. படிப்பு செலவுக்கும் பணம் தராமல் நிறுத்திவிட்டார் நீரஜ்..

 குத்துயிரும் குலையுயிரும்

குத்துயிரும் குலையுயிரும்

ஆனாலும், குழந்தைகளின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக, குஸ்மா வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைக்கிறார்.. அவர்களுக்கு தந்தை மூலம் எந்த வகையான ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண் குழந்தைகளை கவனமாக பாதுகாத்தும் வருகிறார். இப்படிப்பட்ட சூழலில்தான், மறுபடியும் நீரஜ் குடும்பம் வேலையை காட்டியது.. சம்பவத்தன்று, நீரஜ், அவரது பெற்றோர், அவரது சகோதரர் என எல்லாரும் ஒன்றாக சேர்ந்து மறுபடியும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.. நடுரோட்டில் குஸ்மாவை கட்டிப்போட்டு அடித்துள்ளனர்.. அந்தரங்க உறுப்பிலும் கொடுமையாக அடித்து கட்டையால் தாக்கி உள்ளனர்..

சிகிச்சை

சிகிச்சை

பெரிய பெரிய கற்களை கொண்டு தாக்கி உள்ளனர்.. கீழே கிடந்த தடித்த குச்சிகளை வைத்து அடித்திருக்கிறார்கள்.. இதனால் நிலைக்குலைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார் குஸ்மா.. மகளை நடுரோட்டில் வைத்து அடிக்கிறார்கள் என்ற தகவல் பறந்ததும், குஸ்மாவின் அப்பா கதறிக் கொண்டே ஓடிவந்தார்.. குத்துயிரும் குலையுயிருமாக கிடந்த மகளை, தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.. அங்கே தீவிர சிகிச்சை நடந்தது.. இந்த தகவல் கிடைத்ததும், கொட்வாலி போலீசாரும் மருத்துவமனைக்கு சென்று, குஸ்மாவிடம் விசாரணை நடத்தினர்.. இந்த சம்பவம் அப்போது மீடியாக்களில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 அந்தரங்க உறுப்பு

அந்தரங்க உறுப்பு

தன்னுடைய பெண் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட கூடாது என்று எந்தஅளவுக்கு குஸ்மா எத்தனையோ இன்னல்களை தாங்கிக் கொண்டார்.. ஆனால், இப்போது மகாராஷ்டிராவில் நடந்துள்ள சம்பவத்தில், குஸ்மாவுக்கு நேர்மாறான செயலில் ஒரு பெண் ஈடுபட்டுள்ளார்.. உஸ்மானாபாத்தில் ஹோலியில் வசித்து வருகிறார் அந்த பெண்.. 25 வயதாகிறது.. இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.. தற்போது காசர் ஜவாலா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது... 2-வது குழந்தையும் பெண்குழந்தையாக பிறந்ததால், ஆத்திரமடைந்துள்ளார் அந்த பெண்..

 ஹெவி டென்ஷன்

ஹெவி டென்ஷன்

பெற்ற குழந்தையையும் தூக்கவில்லை.. எந்நேரமும் எரிச்சலும் டென்ஷனிலும் காணப்பட்டாராம்.. இந்நிலையில், அளவுக்கு அதிகமான மனவிரக்திக்கு ஆளான அவர், கடந்த டிசம்பர் 29 அன்று பச்சிளம் குழந்தையை கொன்றுவிட்டார்.. கர்சீப்பை எடுத்து கழுத்தை நெரித்துவிட்டதில், குழந்தை அப்போதே இறந்துவிட்டது. இதற்கு பிறகு, எதுவுமே தெரியாததுபோல், இயல்பாக காணப்பட்டார் அந்த பெண். பின்னர், குழந்தை இறந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது... போலீசாரும் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை செய்து வந்தனர்.

 எகிறும் மோகம்

எகிறும் மோகம்

குழந்தை எப்படி இறந்தது என்பது குறித்து போலீசாருக்கும் எதுவும் பிடிபடவில்லை.. இதனால், கிடுக்குப்பிடி விசாரணையை பெற்ற தாயிடமே ஆரம்பித்தனர்.. குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து, இத்தனை நாட்கள் கழித்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஆண் வாரிசு மீதான மோகமும், அதையொட்டி நடக்கும் குற்ற சம்பவங்களும், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடந்து கொண்டே இருக்கின்றன.. சமூகத்தில் பிற்போக்கான சிந்தனைகள் மறைந்து வரும் இக்காலத்தில், பெண் குழந்தை என்பதால் பெற்ற தாயே பச்சிளம் குழந்தையை கொன்றது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+