மும்பை ஜெய்ப்பூர்- மும்பை விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் துப்பாக்கிச் சூடு! 4 பேர் பலி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே ஜெய்ப்பூர்- மும்பை விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு ரயில்வே பாதுகாப்பு படை காவலர் உள்பட 4 பேர் பலியாகிவிட்டனர்.
ஜெய்ப்பூரிலிருந்து மும்பை நோக்கி 12956 என்ற எண் கொண்ட விரைவு ரயில் இன்று காலை 5.23 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மும்பை அருகே போரிவலி பால்கார் ரயில் நிலையத்தை தாண்டிய போது அந்த ரயிலில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து சுட்டார்.

இதில் உடனிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர், 3 பயணிகள் என 4 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து அந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் தாஹிசார் ரயில் நிலையத்தில் தப்பியோடினார்.
தகவலறிந்த போலீஸார் அவரை விரட்டி சென்று பிடித்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டை ஏன் நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விடுமுறை அளிக்காதது, உயரதிகாரிகளின் அழுத்தம் உள்ளிட்டவற்றால் மன உளைச்சல் ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications