பாழடைந்த மருத்துவமனை கட்டிடம்.. மும்பை போலீசுக்கு வந்த போன்! உள்ளே 4 பிணங்கள் -யார் எந்த மர்ம ஆண்?
மும்பை: பாழடைந்த மருத்துவமனை கட்டிடத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த 4 பேரின் சடலங்களை மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள கண்டிவாலி பகுதியில் 15 ஆண்டுகளாக செயல்படாத நிலையில் பழைய மருத்துவமனை கட்டிடம் அமைந்துள்ளது.
அந்த கட்டிடத்தில் கிரண் தேவி என்ற பெண், முஸ்கன் மற்றும் பூமி ஆகிய தனது 2 மகள்களுடன் வசித்து வந்திருக்கிறார்.

மும்பை போலீசுக்கு வந்த போன்
இந்த நிலையில், மும்பை போலீசுக்கு நேற்றிரவு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் மருத்துவமனை கட்டிடத்தில் வசித்து வந்த பெண் குடும்பத்தோடு இறந்துகிடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே பழைய மருத்துவமனை கட்டிடத்துக்கு சென்று செல்போனில் கிடைத்த தகவல் உண்மைதானா என்று அறிய முற்பட்டனர்.

4 பேர் பலி
அப்போது, கிரண் தேவியும் அவரது மகள் முஸ்கனும் அறைக்குள் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மற்றொரு மகள் பூமி எங்கே என்று தேடியபோது அவர், வேறொரு அறை ஒன்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கிக்கொண்டு இருந்தார். அவருக்கு அருகே ஒரு ஆணின் சடலமும் தொங்கிக் கொண்டிருந்தது.

யார் அந்த ஆண்?
4 பேரது உடல்களையும் மீட்ட மும்பை போலீஸ் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மற்றொரு ஆண் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் ஷிவ்தயால் சென் என்றும், ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பாழடைந்த அந்த மருத்துவமனையில் சில கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
தூக்கில் தொங்கிய ஓட்டுநர் ஷிவ்தயால் சென், தாய் கிரண் தேவியையும் அவரது 2 மகள்களையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று மும்பை போலீசார் கணித்துள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுகள், தடயவியல் அறிக்கை கிடைக்கப்பெற்று முழு விசாரணை செய்த பிறகே உண்மை குற்றவாளி யார் என்பது தெரியவரும் என அவர்கள் கூறுகின்றனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications