அழகாக டிரஸ் செய்து வெளியே கிளம்பிய 4 வயது அன்விகா! 12 ஆவது மாடி ஜன்னலில் சாய்ந்ததால் சோகம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 வயது பெண் குழந்தை ஒன்று, 12 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. தாய், தனது செருப்பை காலில் போட முயன்ற அந்த நொடியில் இந்த குழந்தை கீழே விழுந்துவிட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் வசாய் பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் அன்விகா பிரஜாபதி. இவர்கள் 12 ஆவது மாடியில் வசித்து வருகிறார்கள்.

mumbai crime

சம்பவத்தன்று நைகானில் அமைந்துள்ள நவ்கர் நகர் குடியிருப்பில் குழந்தையுடன் வெளியே செல்ல தம்பதி தயாராகிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மனைவி, அன்விகாவுடன் வெளியே வந்தார். கணவர் வீட்டை பூட்டிக் கொண்டு வருவதற்கு ஆயத்தமாகினார்.

குழந்தையின் தாய்

அப்போது குழந்தையின் தாய் செருப்பு போட முயன்றார். அப்போது அந்த குழந்தை 2 அடி எடுத்து வைத்தது. அங்கு படிக்கட்டு இருந்ததால் பதறிய அந்த தாய், உடனே குழந்தையை இழுத்து ஷூ ஸ்டான்டில் உட்கார வைத்தார்.

செருப்பை தேடி

தாய், செருப்பை தேடி எடுத்து போட முயற்சிக்கும் வேளையில், அன்விகா அந்த ஷூ ஸ்டான்டில் இருந்து கண்ணாடி போட்டு திறந்திருந்த ஜன்னலில் ஏறி அமர்ந்தார். உடனே பேலன்ஸ் தாங்காமல் குழந்தை அப்படியே சாய்ந்து கீழே விழுந்தது.

கால்கள் மட்டும்

விழுவதற்கு முன்னர் கால்கள் மட்டும் தெரிந்த நிலையில் பிடிப்பதற்குள் முழுவதுமாக கீழே விழுந்துவிட்டது. உடனே பதறிய தாயும் தந்தையும் போய் கீழே போய் பார்த்த போது குழந்தை பேச்சு மூச்சில்லாமல் இருந்தது.

அலறல் சப்தம்

தாயின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குழந்தையின் தாயும் தந்தையும்

இதை கேட்டு குழந்தையின் தாயும் தந்தையும் கதறி அழுத காட்சி அங்கிருந்தோரை கலங்கச் செய்தது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு 8 மணிக்கு நடந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த விசாரணையில்தான் இந்த பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

துயரம்

ஒரு நொடியில் நடந்த இந்த துயரச் சம்பவம், குடியிருப்பாளர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது. எனவே சுட்டித்தனமான குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது அந்த குழந்தையை ஒருவர் கண்காணிக்க வேண்டும். கணவர் அன்விகாவை தூக்கி வைத்துக் கொண்டு மனைவி செருப்பை அணிந்திருக்க வேண்டும். அது போல் மனைவியும் கணவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே வரும் வரை அன்விகாவை பத்திரமாக தூக்கி வைத்திருக்க வேண்டும்.

ஒரு நிமிடம் கூட ஆகாது

செருப்பு போட ஒரு நிமிடம் கூட ஆக போவதில்லை. அப்படியிருக்க செருப்பு போட முயன்று குழந்தை இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை வளர்ப்பு என்பதே குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதுதான். அவர்கள் எந்த நேரத்திலும் துருதுருவென இருப்பார்கள். குழந்தைகள் அடுத்த நொடி என்ன செய்வார்கள் என கணிக்கவே முடியாது, ஆனாலும் நாம் இது போன்ற ஆபத்துகளை கணித்து குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+