Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் மீண்டும் 15 வயது மாணவனை சீரழித்து.. 40 வயது மும்பை டீச்சருக்கு ஜாமீன் வேணுமாம்! ஒரே ஒப்பாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்காதல்கள் அட்டகாசங்கள் அதிகரித்து வரும் நிலையில், குடும்ப உறவுகளும் சிதைந்து கொண்டிருக்கின்றன.. கள்ளக்காதல் வன்முறைகள் அதிகமாவதும், அதுதொடர்பான குற்றங்கள் அதிகமாகி கைது நடவடிக்கைகள் அதிகமாகவும், பெருகி கொண்டிருக்கிறது.. இதோ மகாராஷ்டிர மாநிலத்தில் ஆசிரியை ஒருவர், தகாத உறவால் பொதுவெளியில் அசிங்கப்பட்டுள்ளார்.. ஒழுக்கத்தையும், கல்வியையும் போதிக்கும் ஆசிரியர், ஆசிரியைகளே இப்படி தவறுகளை செய்தால், மாணவ, மாணவிகளை வழிநடத்துவது யார்??

மராட்டிய மாநிலம் மும்பை மாகிம் பகுதியில் பாம்பே ஸ்காட்டிஷ் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது.. இந்த மும்பையில் மிகவும் பிரபலமான பள்ளி என்று கூறப்படுகிறது.

teacher students

இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் பிபாஷா குமார்.. இவருக்கு 40 வயதாகிறது.. இவர் தன்னுடைய பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவனை காதலித்து வந்துள்ளார்.. மாணவனை கடந்த வருடம், சொகுசு ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, பாலியல் உறவிலும் தொடர்ந்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் மாணவன் பள்ளியை விட்டே நின்றுவிட்டான்.. ஆனாலும் மாணவனை மறக்க முடியாத ஆசிரியை, மீண்டும் மாணவனுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் தந்தார்கள்.. பிறகு போலீசாரும் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆசிரியையை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

பிரெயின்வாஷ் - மாத்திரைகள்

போலீசார் இதை பற்றி சொல்லும்போது, "மாணவனை பிரெயின்வாஷ் செய்து அழைத்து சென்றுள்ளார் ஆசிரியை.. மாணவனின் ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவன் பயந்து போய்விட்டான். உடனே மன அழுத்த மாத்திரைகளை மாணவனுக்கு தந்துள்ளார் ஆசிரியை.. பிறகு மது அருந்த வைத்துள்ளார்.. இதற்கு பிறகே 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கும் அழைத்து சென்று, வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

நாளுக்கு நாள் மாணவனின் நடவடிக்கையில், அவனது பெற்றோர் கவனித்து விசாரித்தபோதுதான் மேற்கண்ட உண்மைகள் தெரிந்து, அதிர்ச்சியடைந்தனர். எனினும் +2 தேர்வு நேரம் என்பதால், இந்த விஷயத்தை பெரிதுசெய்யாமல் விட்டுவிட்டனர்.

+2 முடிந்து, மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்துவிட்டான். மாணவனை சந்திக்க முடியாமல், தன்னுடைய வீட்டு வேலையாளை அனுப்பி, மாணவனைத் தொடர்பு கொள்ள சொல்லியிருக்கிறார் ஆசிரியை. இதற்கு பிறகுதான் பெற்றோர் போலீஸூக்கு சென்று, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போக்சோ சட்டம் பாய்ந்தது" என்றனர்.

ஜாமீன் கேட்கும் டீச்சர்

இந்தநிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை பிபாஷா , தனக்கு ஜாமீன் கேட்டு மும்பை போக்சோ கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்..

அந்த மனுவில், மாணவன் தான் என்னை கண்மூடித்தனமாக காதலித்தான்... அந்த மாணவன் என்னை காதலித்ததால் அவனது தாய் போலீசில் பொய் புகார் அளித்துள்ளார். அந்த மாணவன் என்னை மனைவி என்றுதான் கூப்பிடுவான்..

அவன் என்னை நேரில் சந்திக்க விரும்பியதாக சொன்னான்.. அப்போதுகூட, உனது அம்மா அனுமதித்தால் மட்டுமே சந்திப்பேன் என்று நான் சொன்னேன்" என்றெல்லாம் தன்னுடைய மனுவில் ஆசிரியை கூறியுள்ளார். விரைவில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றங்கள் அதிகரிப்பு

நம்முடைய இந்தியாவில் ஏற்கனவே பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் குற்றங்கள் பெருகி வருகின்றன. இவைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. ..

குறிப்பாக சிறார்களின் நலன் காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன... இவை அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுபவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் அரணாய், துணையாய் நிற்கின்றன.

விழிப்புணர்வு தேவை

ஆனாலும்கூட, பெண் குழந்தைகளை போல, ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிர்ச்சியை தந்து வருகிறது... சிறுவர்களுக்கும் பாதுகாப்பின்மை நிலவுவது அதிர்ச்சியையும், வேதனையையும் தந்து கொண்டிருக்கிறது... அதிலும், இதுபோன்ற ஆசிரிய, ஆசிரியைகளால் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அந்த பிஞ்சு குழந்தைகளின் மனநிலைமையும் சேர்த்தே பாதிக்கப்பட்டு வருகிறது..

இதற்கெல்லாம் தீர்வு என்ன? விழிப்புணர்வு தரவேண்டியது மாணவர்களுக்கா? ஆசிரியர்களுக்கா? தெரியவில்லை.. ஆனால், போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கினால், பிஞ்சுகள் எதிர்காலம் ஓரளவு காப்பாற்றப்படும் என்பதை நாம் அழுத்தமாக இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+