மகாராஷ்டிராவில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரேநாளில் 59ஆயிரம் பேர் பாதிப்பு - 301 பேர் மரணம்
மகராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 58993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3288540 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 58993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3288540 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 534603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அம்மாநிலத்தில் ஒரே நாளில் 58993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3288540 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 45 391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2695148 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 534603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பலனின்றி அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 301 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 57329 ஆக அதிகரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications