நள்ளிரவில் கதறல்.. உடன் வந்த நண்பனே செய்த கொடூரம்.. சிறுமியை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது நண்பர் உட்பட 6 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தில் லோயர் பரேல் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். பள்ளி மாணவியான இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து நண்பர்களை சந்திக்க போவதாக சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவள் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியின் நண்பர்களை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டிருக்கின்றனர்.
ஆனால் எங்கு கேட்டும் தனது மகள் வரவில்லை என்ற பதில்தான் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஒரு ஆட்டோவை பிடித்துக்கொண்டு அவளை தேடி புறப்பட்டுள்ளனர். மறுபுறம் சிறுமி தனது நண்பனுடன் சேர்ந்து அவனது நண்பனின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருக்கிறாள். சென்ற இடத்தில் நேரமாகியுள்ளது. எனவே வீட்டுக்கு போக வேண்டும் என்று அவள் கூறியுள்ளாள். ஆனால் நள்ளிரவு 12 மணிக்குதான் கேக் வெட்டுவோம் என்று கூறி சிறுமியை அவர்கள் காத்திருக்க வைத்திருக்கின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இதனையடுத்து நள்ளிரவு 12 மணி ஆகியுள்ளது. கேக் வெட்டப்பட்டு எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எல்லாம் முடிந்துவிட்டது கிளம்பலாம் என்று எண்ணும்போது, தன்னுடன் வந்த நண்பன் பைக் சாவியை தொலைத்துவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளான். இது தனக்கு விரிக்கப்பட்ட வலை என்பதை உணராமல் சிறுமியும் சாவியை தேடியுள்ளார். இதற்கிடையில் எதிர்பார்த்ததை போலவே மற்ற நண்பர்கள் அனைவரும் சென்றுவிட சிறுமியுடன் 6 ஆண்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர். அப்போதுதான் தன்னை சுற்றி ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை அவள் அறிந்திருக்கிறாள். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. அதாவது உடன் வந்த நண்பன் சிறுமியின் வாயை மூட மற்ற நண்பர்கள் வீட்டின் கதவுகளை அடைத்துள்ளனர்.

தேடல்
மறுபுறத்தில் சிறுமியின் தாய் எங்கெல்லாமோ தேடி அலைந்திருக்கிறார். ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம், தனது மகளின் நண்பர்களின் வீடு என எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர் என்எம் ஜோஷி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினரும் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். ஆனால் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் சிறுமியை அவரது நண்பர்கள் உட்பட 6 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி தன்னை விட்டுவிட சொல்லி எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் சிறுமியை விடவில்லை.

புகார்
இதனையடுத்து சிறுமி இவர்களிடமிருந்து தப்பிக்க கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது எதுவும் தெரியாதது போல் சிறார்கள் கதவை திறந்துள்ளனர். வீட்டினுள் சோதனையிட்ட அவர்களுக்கு ஒரு சிறுமியும், உடன் 6 சிறார்களும் இருப்பது தெரிய வந்தது. சிறுமியை பரிசோதித்த காவல்துறையினர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து அனைவரையும் கைது செய்து சிறுமியை அவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் சிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சிறார்கள்
அவர்கள் மூவரும் சிறார் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல மீதமுள்ள மூவர் மீதும் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இவர்கள் 6 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்த சிறுவன் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல கடந்த வாரம் 50 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது மனைவியின் முதல் கணவரின் 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. மும்பையில் இதுபோன்ற தொடர் குற்றங்கள் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications