பெண் ஓனர் செய்த தவறுக்கு மாட்டின் வயிற்றில் 65 தையல்கள்.. கொடூரம்!
மும்பை: மகாராஷ்டிராவில் பெண் ஓனர் செய்த தவறுக்கு மாட்டின் வயிற்றில் 65 தையல்கள் போடப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்ஹரி. இவருடைய மனைவி கடந்த 1 ஆம் தேதி குளிப்பதற்காக சென்றார். அப்போது தனது 20 கிராம் மதிப்பிலான தங்கச் தாலிச் செயினை கழற்றி சோயாபீன் மற்றும் கடலைப்பருப்பு நிரப்பப்பட்ட தட்டில் மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் குளித்துவிட்டு அவர் தாலி செயினை மறந்துவிட்டு மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். மேலும் அவர் வீட்டில் எருமை மாடு வளர்த்து வருவதால் அதற்கு உணவு கொடுக்கச் சென்றார்.
அப்போது சோயா பீன், கடலைப்பருப்பு தட்டை எடுத்து எருமைக்கு உணவாக கொடுத்தார். பின்னர் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போதுதான் தங்க தாலி சங்கிலி கழுத்தில் இல்லாததை எண்ணி அதிர்ச்சி அடைந்தார். உடனே வீடு முழுக்க தேடினார். கிடைக்கவில்லை. அப்போதுதான் அந்த சோயாபீன்- கடலைப்பருப்பு தட்டில் வைத்தது நினைவுக்கு வந்தது.
#WATCH महाराष्ट्र:वाशिम ज़िले के एक गांव में भैंस के द्वारा सोने का मंगलसूत्र खाने की घटना सामने आई है। ऑपरेशन से 25 ग्राम का मंगलसूत्र निकाला गया।
— ANI_HindiNews (@AHindinews) October 1, 2023
पशु चिकित्सा अधिकारी बालासाहेब कौंदाने ने बताया, " मेटल डिटेक्टर से पता चला कि भैंस के पेट में कोई धातु है। 2 घंटे ऑपरेशन चला,… pic.twitter.com/AlM8cpamMc
ஓடி போய் பார்த்தார். அங்கு தட்டு இல்லை. அடடா, எருமை மாடுக்கு சாப்பிட தட்டை வைத்தோமே என பதறி அடித்துக் கொண்டு மாட்டு கொட்டகைக்கு சென்றார். அங்கு பார்த்த அவருக்கு அதிர்ச்சி, எருமை மாடு அன்றைக்கு என பார்த்து தட்டு முழுக்க இருந்த உணவை சாப்பிட்டுவிட்டது. இதனால் மேலும் பதறிய அந்த பெண் உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்துள்ளார்.
அவர் வந்து மாட்டின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அதன் வயிற்று பகுதியில் தங்க சங்கிலி இருந்தது தெரியவந்தது. உடனே அந்த மாட்டின் வயிற்றை அறுவை சிகிச்சை செய்து அந்த 20 கிராம் தங்க சங்கிலியை எடுத்துள்ளார். இதனால் மாட்டிற்கு 60 முதல் 65 தையல்கள் போடப்பட்டன. இது பெரும் கொடூர சம்பவம் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். தங்க சங்கிலியின் மதிப்பு ரூ 1.5 லட்சமாகும்.
தாலி செயினை கழற்றி பொறுப்பில்லாமல் மாட்டு தீவனத்தில் வைத்ததுடன் அதன் வயிற்றை கிழித்து சங்கிலியை எடுத்துள்ளார். அந்த மாட்டின் வயிற்றில் போடப்பட்ட 65 தையல்கள் எத்தனை வலியை கொடுக்கும். வாயில்லா ஜீவனை இப்படியா வதைப்பது என நெட்டிசன்கள் கண்டிக்கிறார்கள். அதேவேளையில் அந்த தங்க சங்கிலி உள்ளேயே இருந்தாலும் மாட்டுக்கு ஆபத்துதான். அதனால் அதை வெளியே எடுத்ததுதான் நல்லது என இரு வேறு விதமான கருத்துகள் உலா வருகின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications