படுத்த படுக்கையாக இருந்த மனைவி.. மனநலம் பாதித்த மகள்.. கழுத்தை அறுத்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர்
மும்பை: மும்பை அந்தேரியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியையும் மனநலம் குன்றிய மகளையும் 89 வயது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தேரி கிழக்கு பகுதியில் ஷேரே பஞ்சாப் காலனியை சேர்ந்தவர் புருஷோத்தம் சிங் காந்தோக் (89). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 81 வயதில் ஜாஸ்பீர் கவுர் என்ற மனைவியும், 66 வயதில் கமல்ஜித் கவுர் என்ற மகளும் இருந்தனர்.
புருஷோத்தமின் மனைவி நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது மகள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது மூத்த மகள் குர்பீந்தர் கவுர். திருமணமாகி வேறு ஒரு பகுதியில் இருந்து வருகிறார்.

மகள்
இந்த நிலையில் மனைவியையும் மகளையும் புருஷோத்தம்தான் கவனித்து வந்துள்ளார். இருவரும் படுத்த படுக்கையாகவே இருந்துள்ளனர். அவர்களது தேவையான பணிவிடைகளை புருஷோத்தம்தான் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் புருஷோத்தம் முதியவர் என்பதால் அவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டது.

கத்தி
இதனால் தொடர்ந்து அவர்களை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் இருவரையும் கொன்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார். உடனே சமையலறைக்கு சென்ற அவர் கத்தியை கொண்டு இருவரின் கழுத்தையும் அறுத்துள்ளார். இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துவிட்டனர்.

கழுத்து அறுத்த கணவர்
இதையடுத்து சுமார் 12 மணி நேரம் கழித்து அதே பகுதியில் வசித்து வரும் மூத்த மகள் குர்பீந்தருக்கு போன் செய்து கழுத்தை அறுத்த விஷயத்தை தெரிவித்துவிட்டார். இதனால் பதறியடித்து கொண்டு குர்பீந்தர் தனது தந்தை இருக்கும் பிளாட்டிற்கு தனது கணவர், மகன்களுடன் சென்றுள்ளார். கதவை தட்டிய போது புருஷோத்தம் கதவை திறக்க மறுத்துவிட்டார். போலீஸுக்கு போன் செய்து அவர்கள் வந்தால் மட்டுமே திறப்பேன் என்றார்.

ரத்த வெள்ளம்
இதையடுத்து குர்பீந்தர் தனது கணவருடன் மேகவாடி போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது போலீஸார் சென்றவுடன் புருஷோத்தம் கதவை திறந்துள்ளார். உள்ளே போய் பார்த்த போது ஜாஸ்பீரும், கமல்ஜித்தும் படுக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதையடுத்து குர்பீந்தர் தனது தந்தையிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்டுள்ளார்.

வலியால் துடித்த மகள்
அதற்கு அவர் அவர்கள் வலியால் துடிப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் அவர்கள் தூங்க போன பிறகு நான் அவர்களின் கழுத்தை அறுத்துவிட்டேன் என்றார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். முதியவர் ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications