கலிகாலம்! பாசத்துடன் ஓடோடி வந்த மகள்..! நண்பருடன் சேர்ந்து சீரழித்த தந்தை..! திடுக்கிட்ட போலீஸ்.!

Subscribe to Oneindia Tamil

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெற்ற மகளையே நண்பருடன் சேர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக கருதப்படும் மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.

எவ்வளவோ முயன்றும் பெண்கள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க முடியாமல் மகாராஷ்டிரா போலீஸார் திணறி வருகின்றனர்.

மும்பையில் அதிர்ச்சி

மும்பையில் அதிர்ச்சி

இந்நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மும்பையில் பெற்ற மகளையே நண்பருடன் சேர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படுபாதக செயலுக்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

தந்தை மீது புகார்

தந்தை மீது புகார்

மும்பையின் புறநகர் பகுதி ஒன்றில் தனது தாயுடன் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவர், தனது தந்தை மற்றும் அவரது நண்பர் தன்னை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், தனது தாய் மற்றும் சகோதரருடன் தாய் வீட்டில் வசித்து வருவதாகக் கூறினார். கூலி வேலை செய்து வந்த இவரது தந்தை மோகாவில் வசித்து வந்தார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

கடந்த மே 15 அன்று, நானும் என் சகோதரனும் எங்கள் தந்தையைச் சந்திக்க மோகாவுக்கு வந்து சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தோம். ஒரு நாள் இரவு, என் தந்தை என்னை பலாத்காரம் செய்தார். நான் சத்தம் போட்டு கத்தியபோது, என் தந்தை என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், என் தந்தை என்னை மீண்டும் பலாத்காரம் செய்தார், என்று அவர் போலீசாரிடம் கூறினார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

மே 17 அன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அங்கு இருந்து தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்ததாகக் கூறப்படுகிறது. பிறகு மோகா வந்த அவரது நண்பர் சிறுமியை குளித்தலைக்கு அழைத்துச் சென்று நான்கு நாட்கள் அங்கேயே வைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்தார் என்றும் புகார் கூறப்படுள்ளது. இதையடுத்து சிறுமியின் தந்தை சோம்நாத் மற்றும் அவரது நண்பர் குலாப் சிங் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+