Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனுமதி காலம் முடிந்தும்.. அரசு இல்லத்தில் தங்கியிருந்த..35 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 கோடி அபராதம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: அனுமதி காலம் முடிந்தும் நீண்ட நாட்கள் அரசு இல்லத்தில் தங்கி இருந்த 35 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிக உயர்ந்த பதவிகளை அலங்கரிப்பவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆவார்கள். இவர்கள் இந்தியாவில் எந்த மூலையில் பணிபுரியுந்தாலும் அவர்கள் தங்குவதற்கு அரசு இல்லம் ஒதுக்கி கொடுக்கப்படும்.

ரூ.3.82 கோடி அபராதம்

ரூ.3.82 கோடி அபராதம்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஓய்வு பெரும்போதோ அல்லது வேறு இடங்களுக்கு பணிமாறுதல் பெற்று செல்லும்போதோ அரசு ஒதுக்கிய இல்லத்தை காலி செய்து விட வேண்டும். அதன்பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அரசு இல்லத்தை காலி செய்யாவிடில் அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் அனுமதி காலம் முடிந்தும் நீண்ட நாட்கள் அரசு இல்லத்தில் தங்கி இருந்த 35 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ரூ.3.82 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்.டி.ஐ தகவல்

ஆர்.டி.ஐ தகவல்

இந்த அதிகாரிகளின் பட்டியலில் மும்பை போலீஸ் முன்னாள் கமிஷனர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் ஒருவர் இரண்டு முறை பா.ஜ.க எம்.பி. ஆவார். இந்த பட்டியலில் நான்கு காவல் ஆணையர்கள் உள்ளனர், மேலும் இரண்டு ஏடிஜிபி, மற்றும் முன்னாள் டிஜிபி ஒருவரும் இந்த பட்டியலில் உள்ளார். தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த அதிகாரிகள் செலுத்த வேண்டிய அபராதங்கள் மார்ச் 2021 இறுதி வரை கணக்கிடப்பட்டுள்ளன.

9 ஆண்டுகள் கூடுதலாக தங்கியுள்ளார்

9 ஆண்டுகள் கூடுதலாக தங்கியுள்ளார்

இந்த 35 அதிகாரிகள் பட்டியலில் ஏழு பேர் மட்டும் தலா ரூ .20 லட்சத்துக்கு மேல் அபராதம் செலுத்த வேண்டியதுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டம் கூறுகிறது. புனேவில் உள்ள மாநில ரிசர்வ் போலீஸ் படையின் டி.ஐ.ஜி சஞ்சய் குமார் பவிஸ்கர் மட்டும் அதிக அளவாக ரூ.77.75 லட்சம் அபராத தொகை செலுத்த வேண்டும். 2011 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் 2020 அக்டோபர் வரை மும்பையில் அரசு இல்லத்தில் தங்கி இருந்துள்ளார்.

3 மாதம் விலக்கு

3 மாதம் விலக்கு

இவர்களில் பலர் நங்கள் அரசு அனுமதி பெற்றே இல்லங்களில் தங்கி இருந்தோம் என்று கூறியுள்ளனர். அபராத தொகை விதிக்கப்பட்டது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ' முதல் மூன்று மாதங்களுக்கு, அரசு எதையும் வசூலிக்கவில்லை, ஏனெனில் இது அவர்களின் குடும்பங்களை மாற்று இடத்துவதற்கு நகர்த்துவதற்கான நேரம். அடுத்த மூன்று மாதங்களுக்கு, அரசாங்கம் உரிம கட்டணம் மட்டுமே வசூலிக்கிறது.

அதிகாரி சொல்வதென்ன?

அதிகாரி சொல்வதென்ன?

ஆயினும் ஒரு அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகும் தங்குமிடத்தை காலி செய்யத் தவறினால், உரிமக் கட்டணத்திற்கு கூடுதலாக அபராதம் விதிக்க அரசு உத்தரவிடுகிறது. தங்குமிடத்தின் அளவைப் பொறுத்து உரிம கட்டணம் மாதத்திற்கு ரூ .120 முதல் ரூ.1,400 வரை மாறுபடும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+