உனக்கு 27, எனக்கு 57.. அடிக்கடி அத்துமீறிய நகைக்கடை உரிமையாளர்.. சொந்த வீட்டிலேயே திருடி ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் அடிக்கடி அத்துமீறியதை வெளியில் சொல்லாமல் இருக்க சொந்த வீட்டில் திருடி வேலைக்கார பெண்ணுக்கு நகைக்கடை உரிமையாளர் பணம் நகையை கொடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. நகைகள் திருட்டுப்போனதாக நகைக்கடை உரிமையாளரின் மனைவி அளித்த புகாரில் விசாரித்த மும்பை போலீசார் இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளார்.

பெரிய தொழில் அதிபர்கள் சிலர், தங்கள் வீடுகளில் வேலை செய்யும் இளம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவது, பணம், பொருளை காட்டி அவர்களிடம் அத்துமீறுவது, சில நேரங்களில் அவர்களிடம் வலுக்கட்டாயமாக அத்துமீறிவிட்டு, சமாதானத்திற்காக சில லட்சங்களை அள்ளி வழங்குவது நடக்கிறது. சில நேரங்களில் தவறே செய்யாத வேலைக்கார பெண்களுக்கு திருடி என்ற பட்டம் கட்டி அவர்களை போலீசில் ஒப்படைப்பதும் நடக்கும்.

mumbai gold jewellery

சில இடங்களில் இவற்றுக்கு நேர் மாறாக பணக்கார வீட்டில் வேலைசெய்யும் பெண்களில் ஒரு சிலர், அந்த பணக்காரரிடம் நகை பணத்தை திருடிவிட்டு நல்ல பிள்ளை போல் நடிப்பதும் நடக்கும். இதில் நாம் பார்க்க இருப்பது இரண்டாவது ரகம். அதாவது அடிக்கடி வேலைக்கார பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு, அவருக்கு, பணம் நகைகளை அள்ளிக்கொடுப்பதை செய்வது தான். இப்படி செய்து வந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர், சொந்த வீட்டிலேயே திருடி அந்த செயலை செய்ததால் சிக்கி உள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

மும்பையை சேர்ந்த 55 வயது நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 27 வயது பெண் ஒருவரிடம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வீட்டு வேலைக்காக அமர்த்தி உள்ளார் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பணம், நகைகள் திருட்டுப்போனதாக நகைக்கடை உரிமையாளரின் மனைவி கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் போலீசார் சந்தேகத்தின்பேரில் வேலைக்கார பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி உள்ளார்கள். இதில் ரூ.15 ஆயிரம் திருடியதாக அவர் ஒப்புக்கொண்டார். அப்போது அவர் போலீசிடம் கூறிய தகவல்களை கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஆடிப்போனார்கள். ஏனெனில் நகைக்கடை உரிமையாளர் கடந்த மாதம் பல சந்தர்ப்பங்களில் தன்னிடம் அத்துமீறியதாக வேலைக்கார பெண் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் வேலைக்கார பெண்ணை நகைக்கடை உரிமையாளர் பல முறை அத்துமீறியதும், நடந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் இருக்க வீட்டில் இருந்த தனது மனைவியின் நகையை திருடி வேலைக்கார பெண்ணிடம் அவர் கொடுத்ததும் அம்பலமானது. இதையடுத்து போலீசார் நகைக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது, நகைக்கடை உரிமையாளர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+