மும்பை: நாயை பலாத்காரம் செய்த காமகொடூரன்.. சிசிடிவி மூலம் வசமாக சிக்கினான்- உ.பி.க்கு தப்பி ஓட்டம்!
மும்பை: மும்பையில் பெண் நாயை பலாத்காரம் செய்ததாக இளைஞன் ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்துக்கு அந்த நபர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

நாய்களுடன் உறவு
மகாராஷ்டிராவில் நாய்களுடன் மனிதர்கள் உறவு வைத்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடருகின்றன. மும்பை அந்தேரி (மேற்கு) பகுதியில் காய்கறி வியாபாரி ஒருவர் நாயுடன் உறவு வைத்துக் கொண்ட வீடியோ கடந்த வாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நபரை வீடியோ ஆதாரத்துடன் டி.என். நகர் போலீசார் கைது செய்தனர்.

மீண்டும் சம்பவம்
தற்போது மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் கலினா என்ற இடத்தில் அதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பிராணிகள் நலச் சங்க தலைவர் சவிதா மகாஜன் புகார் ஒன்றை போலீசில் கொடுத்துள்ளார்.

உ.பி. இளைஞரின் வெறிச்செயல்
இது தொடர்பாக சவிதா மகாஜன் கூறுகையில், சிசிடிவி கேமரா பதிவுகளில் இளைஞன் ஒருவன் பெண் நாயை பலாத்காரம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர் அந்த நபர் என தெரியவந்தது. இது தொடர்பாக வகோலா போலீசில் ஆதாரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ் வலை வீச்சு
தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர் என்றார். தற்போது அந்த இளைஞர் உத்தரப்பிரதேசத்தில் இருப்பதாகவும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications