‛மம்மி மம்மி’.. கரையில் கதறிய சிறுமி! மகள் கண்முன்னே கடல் அலையில் சிக்கி பலியான தாய்.. ஷாக் வீடியோ
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கடற்கரையில் பாறையில் அமர்ந்து கணவருடன் சேர்ந்து வீடியோ எடுத்த பெண் ஒருவர் பெரிய அலையில் சிக்கி கடலுக்குள் விழுந்து உயிரை பறிகொடுத்தார். இந்த நிலையில் அந்த பாறையில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை கடல் அலை இழுத்து சென்றதும், கரையில் இருந்த அவரது மகள் ‛‛மம்மி.. மம்மி'' என கதறிய வீடியோ வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய சூழலில் எப்போதுமே வீடு, பணி செய்யும் இடம் என பலரது வாழ்க்கை வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் ஒவ்வொருவரும் தங்களின் குடும்பம் அல்லது நண்பர்களுடன் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று வருவதில் ஆர்வமாக உள்ளனர்.

இத்தகைய சூழலில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன் என்ற பெயரில் சிலர் எல்லை மீறி நடந்து கொள்வதும், ஆபத்தை உணராமல் செய்யும் சிறு தவறால் உயிரை பறிகொடுப்பதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் தற்போது மும்பையில் நடந்துள்ளது.
‛‛மம்மி.. மம்மி..'' என மகள் கதற பெண் ஒருவர் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு இறந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ராபலி பகுதியில் வசித்து வருபவர் முகேஷ் சோனார். இவரது மனைவி ஜோதி சோனார் (வயது 32). இந்த தம்பதி தனது குடும்பத்துடன் கடந்த 9 ம் தேதி ஜூசு பீச்சிக்கு சென்றனர். அப்போது அங்கு கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் பெரிய பெரிய அலைகள் எழுந்தன. இதனால் அவர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து அந்த தம்பதி தனது குடும்பத்துடன் அங்கிருந்து பாந்த்ரா துறைமுகத்துக்கு வந்தனர். அப்போதும் கடலில் சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து முகேஷ்-ஜோதி தம்பதி கடற்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து வீடியோ, போட்டோ எடுத்தனர். அப்போது கடல் அலைகள் அவர்கள் அமர்ந்திருந்த பாறையில் வேகமாக மோதி மேலெழும்பியது. ஜோதி தனது கணவர் முகேசின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு போட்டோ, வீடியோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார்.
A 27-year-old woman drowned in the sea at Bandstand in Bandra, Mumbai. This incident occurred on Sunday evening, July 9th. The woman was taking a selfie with her husband on a rock near the shore when a big wave came, sweeping her away into the water. @indiatvnews pic.twitter.com/rzxxI1RBC3
— Suraj Ojha (@surajojhaa) July 16, 2023
அப்போது திடீரென்று மிகப்பெரிய அலை வந்தது. அப்போது பாறையில் அமர்ந்திருந்த முகேஷ், ஜோதி ஆகியோர் அந்த அலையில் சிக்கினர். பாறையில் அமர்ந்திருந்த இருவரும் கடலுக்குள் விழுந்தனர். இதை பார்த்த அவர்களின் மகள், ‛‛மம்மி.. மம்மி.. மம்மி..'' என கதறினார். இதை பார்த்து ஷாக்கான பொதுமக்கள் கடலில் விழுந்த முகேசை விரைவாக மீட்டனர். ஆனால் ஜோதியை அவர்களால் மீட்க முடியவில்லை.
ஏனென்றால் ஜோதியை கடல் அலை கடலுக்குள் இழுத்து சென்றுவிட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கடற்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் மறுநாள் அவரது உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதற்கிடையே கடல் அலையை பொருட்படுத்தாமல் முகேஷ்-ஜோதி போட்டோ-வீடியோவுக்கு போஸ் கொடுத்ததும், அவர்கள் திடீரென கடல் அலையில் அடித்து செல்லப்படுவது தொடர்பான வீடியோ தற்போது இணையதங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர்கள் 2 பேரும் கடலில் அடித்து செல்லப்படும் சூழலில் மகள், ‛‛மம்மி.. மம்மி..'' என கதறும் குரல் அனைவருக்கும் கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications