ஐஸ்வர்யாவை நோக்கியிருந்த கேமரா.. டக்குன்னு கட் செஞ்சா.. அபிஷேக் பச்சன் கால்.. உத்துப் பார்த்தா!
மும்பை: தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டு விசேஷத்திற்கு வருகை தந்த அபிஷேக் பச்சன் தங்க காலணிகளை அணிந்திருந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
தங்கம் என்பது மிகவும் மரியாதைக்குரிய பொருளாக பார்க்கப்பட்டது. இதன் விலை குறைந்த காலத்தில் கூட அதற்குண்டான மரியாதை கொடுக்கப்பட்டு வந்தது.
தங்கத்தில் மூக்குத்தி, தோடு, கழுத்திற்கு ஆரம், செயின், நெக்லேஸ், இடுப்புக்கு ஒட்டியாணம், கைகளுக்கு வளையல்கள், விரல்களுக்கு மோதிரங்கள், பிரேஸ்லெட்டுகள் என பல வகையான அணிகலன்களை மக்கள் அவரவர் வசதிக்கேற்ப அணிந்து வருகிறார்.

சினிமா பிரபலங்கள்
இன்னும் வசதிப்படைத்தவர்கள் உதாரணமாக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் தங்கத்தால் செய்யப்பட்ட ஆடைகளை அணிகிறார்கள், தங்க ஜரிகையால் செய்யப்பட்ட புடவைகளையும் அணிந்துக் கொள்கிறார்கள். இரு மனங்களின் இணைவை குறிக்கும் திருமாங்கல்யம் என்ற ஒன்றை பெண்கள் புனிதமாக கருதி வருகிறார்கள்.

கால் விரல்கள்
இதனால்தான் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எல்லா நகைகளையும் கழற்றி அடமானம் வைக்கும் பெண்கள் திருமாங்கல்யத்தை அடமானம் வைக்கவே தயங்குவார்கள். அப்படிப்பட்ட உன்னதமான திருமாங்கல்யம் தங்கத்தால் செய்யப்படுவதால் அந்த தங்கத்தை காலில் கொலுசாகவோ கால் விரல்களில் மெட்டியாகவோ அணியக் கூடாது என்பது பெரியோர் வாக்கு.

தங்கத்தில் மாஸ்க்
ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. தங்கத்தில் மாஸ்க் அணிகிறார்கள், மெட்டி அணிகிறார்கள், கால் கொலுசு அணிகிறார்கள், மூக்கு கண்ணாடி பிரேம்களை தங்கத்தில் செய்கிறார்கள். இவ்வளவு ஏன் தங்கத்தில் செருப்புகூட அணியத் தொடங்கிவிட்டார்கள்.

நிதி தத்தா
ஆம்! பாலிவுட் தயாரிப்பாளர் நிதி தத்தாவின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராய் பச்சனும் ஆஜரானார்கள். எப்போதும் புகைப்படக்காரர்களின் கேமரா ஐஸ்வர்யா மீதே இருக்கும். ஆனால் இந்த முறை வித்தியாசமாக அனைவரும் அபிஷேக் பச்சனை படம் பிடித்தனர்.

விலை எவ்வளவு
என்னவென்று பார்த்தால் அவர் அணிந்திருந்த காலணி தங்கத்தினால் ஆனது. அந்த செருப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ 6000 ஆகும். ஐஸ்வர்யா ராய் பச்சனும் தங்க நிறத்தினாலான காலணியை அணிந்திருந்தார். ஆனால் ஸ்டைலில் இந்த முறை ஐஸ்வர்யா ராயை அபிஷேக் பச்சன் தூக்கி சாப்பிட்டார் என்றே சொல்ல வேண்டும். இந்த செருப்புடன் கோயிலுக்கு எங்கும் செல்லாமல் இருந்தால் சரி!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications