Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ்ல ஏன் விளக்கு எரியல? அப்பாவியாய் நபரிடம் கேட்ட பெண்.. "சிஸ்டர்"னு கூப்பிட்டே.. புனேவில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: புனே நகரில், இளம்பெண் ஒருவர் அளித்த புகாரால் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.. நாளுக்கு நாள் சொகுசு பஸ்களில் இதுபோன்று தொடரும் அட்டூழியங்களால், பெண் பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியும் வருகிறது. என்ன நடந்தது?

சில வருடங்களுக்கு முன்பு, ஆம்னி பஸ்களின் அமைப்பே வேறு மாதிரி இருந்தது.. அதாவது, குஷன் சீட்கள், புஷ் பேக் சீட்கள் மட்டும்தான் அப்போது இருந்தன.. இதற்கு பிறகு, தொலை தூரம் செல்வதற்கு, இரவு நேர பயணத்துக்கு படுக்கை வசதியை பயணிகள் விரும்பினார்கள். எனவேதான், ஆம்னிகளில் படுக்கை வசதிகள் கொண்டுவரப்பட்டன. இது பயணிகளுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், ஆம்னி பஸ்களுக்கான வரவேற்பு கிடைக்க துவங்கியது.
மேலும், ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், பஸ் சீட்களில் நீண்ட நேரம் உட்கார முடியாதவர்கள், வயதானவர்கள், என பலரும் ஆம்னி பஸ் பயணத்தை அதிகமாக பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

Pune Sleeper Coach AC Bus

மெத்தை, படுக்கைகள்

இதனால் நாளடைவில், ஸ்டார் ஓட்டல்களை போலவே, படுக்கைகள் தனி அறைகள் போலவே சொகுசாக வடிவமைக்கப்பட்டு விட்டன.. பஸ்ஸூக்குள் ஸ்கிரீன்கள், மெத்தைகள், தனித்தனி டிவி, தனித்தனி விளக்கு என ஏகப்பட்ட வசதிகள் ஆம்னியில் கொண்டுவரப்பட்டுள்ளது.. இந்த வசதிகள் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது என்றாலும், சில விரும்பத்தகாத செயல்களும் ஆம்னியில் நடப்பதாக புகார்கள் எழுகின்றன.

குறிப்பாக, பெண்கள் தனித்து பயணிக்கவே அச்சப்படும் நிலைமை வந்துள்ளது. கடந்த மாதம் ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது.. பெங்களூர் விட்டு, ஆம்னி பஸ்ஸில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, வாணியம்பாடியில் ஏறிய மற்றொரு ஆம்னி பஸ் டிரைவர், பெண்ணுக்கு பாலியல் சீண்டலை தந்திருந்தது, மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருந்தது.

பஸ் ஸ்டாண்டு பிளாட்பாரம்

இதோ இன்னொரு சம்பவம் வடமாநிலத்தில் புனேவில் நடந்துள்ளது.. மராட்டிய மாநிலம் புனே சுவர்கேட்டில் உள்ள பஸ ஸ்டாண்டுக்கு, விடிகாலை நேரத்தில் 26 வயது பெண் ஒருவர் வந்திருக்கிறார்.. அவர் தன்னுடைய சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், விடிகாலையில் பஸ் இல்லை என்பதால், பஸ்சுக்காக அங்கிருந்த பிளாட்பாரம் ஒன்றில் காத்திருந்தார்.

அப்போது, இளம்பெண் தனியாக நிற்பதை, அங்கிருந்த நபர் ஒருவர் நோட்டமிட்டு கொண்டேயிருந்தார்.. பிறகு, பெண்ணிடம் வந்த அந்த நபர், "சிஸ்டர்" என்று கூப்பிட்டு மெல்ல பேச்சு தந்துள்ளார்.. நீங்கள் எங்கே போக வேண்டும் என்று சிஸ்டர்? என்று விசாரித்திருக்கிறார்.

சிஸ்டர் எங்கே போகணும்

பிறகு, "நீங்க போக வேண்டிய ஊருக்கு பஸ் இங்கு வராது, அந்த பஸ் வேற இடத்தில் நிற்கும், நான் உங்களை அங்கே அழைத்து செல்கிறேன்" என்று கூறி இளம்பெண்ணை அழைத்து சென்றிருக்கிறார்.
பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் நின்ற மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு (MSRTC) சொந்தமான "சிவ்சாகி'" என்ற சொகுசு பஸ்சை காட்டி, "இந்த பஸ்தான், உங்கள் ஊருக்கு போகும்" என்று கூறியிருக்கிறார்.

உடனே அந்த பெண்ணும் பஸ்ஸில் ஏறியிருக்கிறார்.. ஆனால் அதிகாலை நேரம் என்பதால், பஸ்ஸில் விளக்குகள் எல்லாம் அணைந்து கிடந்தன.. ஒரு பயணியும் அந்த பஸ்ஸில் இல்லை.. இதனால் அந்த பெண் தயங்கியிருக்கிறார்.

கண்டக்டர், டிரைவர் வந்துருவாங்க

இதை கவனித்த அந்த நபர், "டிரைவர், கண்டக்டர் வந்ததுமே பஸ் கிளம்பிடும், உள்ளே போய் உட்காருங்க சிஸ்டர்" என்று சொல்லவும், அந்த பெண் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துள்ளார்.. உடனே அந்த நபரும், பின்னாடியே ஏறிக்கொண்டார்.. திடீரென பஸ்ஸின் கதவையும் உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.. அது AC பஸ் என்பதால் ஜன்னல் கண்ணாடிகள் ஏற்கனவே அடைத்து வைக்கப்பட்டிருந்தன..

அடையாளம் தெரிந்தது

பிறகு அந்த நபர், பெண்ணை பஸ்சுக்குள் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அந்த பெண், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து, தோழிக்கு போன் செய்து சொல்லி கதறி அழுதிருக்கிறார்.. இதற்கு பிறகு போலீசிலும் புகார் தரப்பட்டது... இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பஸ் ஸ்டாண்டிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்திருக்கிறார்கள்..

அந்த கேமராவில் பதிவாகியிருந்த உருவத்தை வைத்து, சம்பந்தப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.. புனே மாவட்டம் சிக்ராப்பூரை சேர்ந்த, அந்த நபரின் பெயர் ராம்தாஸ் காடே.. 36 வயதாகிறது. ஆனால், அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால், 8 சிறப்பு குழுக்களை அமைத்து, அந்த ஆசாமியை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

பஸ்ஸை அடித்து நொறுக்கிய சிவசேனா

இந்த சம்பவம் விடிகாலை 5.45 மணிக்கு நடந்துள்ளது.. இந்த பஸ் ஸ்டாண்டுதான் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்படும் மிகப் பெரிய பஸ் ஸ்டாண்டாகும்.. இங்கிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் போலீஸ் ஸ்டேஷனும் இருக்கிறது..

தற்போது இந்த விவகாரம், அம்மாநிலத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது.. அந்த பஸ்ஸை அடித்து நொறுக்கிய சிவசேனா(உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியினர், ஸ்வர்கேட் பேருந்து நிலைய அலுவலகத்தையும் சூறையாடினர். அத்துடன், மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் இந்தக் குற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு காவல் துறைக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.. குற்றம் சாட்டப்பட்டவர் விரைவில் கைது செய்யப்பட்டு, அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்" என்றும் முதல்வர் உறுதி கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+