"அவதாரம்" ராமரைப் போல் அழிக்க முடியாதவர்.. பிரதமருக்கு நடிகை கங்கனா ரனாவத் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாஜகவினர் மோடியின் பிறந்தநாளை பெரியளவில் கொண்டாடவில்லை. இதனால் இந்த ஆண்டு பாஜக சார்பாக 15 நாட்கள் பல்வேறு விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், ரத்த தான முகாம், மருத்துவ முகாம், மாரத்தான் போட்டிகள், கபடி போட்டிகள், பொதுக்கூட்டங்கள் என்று நாடு முழுவதும் பாஜகவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமருக்கு குவியும் வாழ்த்து

பிரதமருக்கு குவியும் வாழ்த்து

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், வலதுசாரி ஆதரவாளருமான கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

தான் ஒரு வலதுசாரி ஆதரவாளர் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட கங்கனா ரனாவத், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராகவும், சாவர்க்கரை வழிகாட்டியாகவும் தேர்ந்தெடுத்து பயணித்து வருகிறார். பல்வேறு தருணங்களில் கங்கனாவின் அரசியல் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கங்கனாவின் பதிவு

கங்கனாவின் பதிவு

இந்நிலையில் நடிகை கங்கனா பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், சிறு வயதில் ரயில்வே பிளாட்பாரங்களில் டீ விற்றதில் தொடங்கி தற்போது உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதராக மாறியுள்ளது வரை, என்ன ஒரு அற்புதமாக பயணம்.

எங்கள் பாக்கியம்

எங்கள் பாக்கியம்

நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ராமரை போல், கிருஷ்ணரை போல், காந்தியை போல் உங்களையும் யாராலும் அழிக்கமுடியாது. உங்களின் பாரம்பரியத்தை யாராலும் மறைக்க முடியாது. அதனால்தான் உங்களை அவதாரம் என்று அழைக்கிறோம். நீங்கள் பிரதமராக இருப்பது எங்களின் பாக்கியம் என்று வாழ்த்தியுள்ளார். இவர் பதிவு சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+