அதானியின் ரூ.1000 கோடி கடன் பத்திரங்கள்.. வெறும் 45 நிமிடத்தில் முழுமையாக விற்று தீர்ந்தது
மும்பை: அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) தனது ரூ.1,000 கோடி மதிப்பிலான மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (NCDs- non-convertible debentures) வெளியிட்டிருந்தது. அது வெளியாகி 45 நிமிடங்களுக்குள்ளேயே முழுமையாக சப்ஸ்கிரைப் ஆகி அமோக வரவேற்பைப் பெற்றது. இதன் ரூ.500 கோடி அடிப்படை ரீல்ஸ கூட வெறும் பத்து நிமிடங்களில் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
"கிரீன்ஷூ" ஆப்ஷனையும் சேர்த்து, மொத்தத் தேவை ரூ.1,000 கோடியைத் தாண்டியது. ஜனவரி 6, 2026 அன்று தொடங்கப்பட்ட இந்த கடன் பத்திர வெளியீடு ஜனவரி 19, 2026 அன்று முடிவடைகிறது. இந்த கடன் பத்திரங்கள் ஆண்டுக்கு 8.90% நிகர வட்டியை வழங்குகின்றன. இவை மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை என இரண்டிலும் பட்டியலிடப்படும்.

கடன் பத்திரங்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும். ICRA மற்றும் CARE கடன் ரேட்டிங்ஸ் நிறுவனங்களால் 'AA-' எனும் நிலையான ரேங்கிங்கை இந்தக் கடன் பத்திரங்கள் பெற்றுள்ளன. இது சில்லறை முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி வாய்ப்புகளில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. மேலும் நல்ல ஒரு லாபத்தையும் வழங்குகிறது.
இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியில் குறைந்தது 75%, தற்போதுள்ள கடன்களைத் திரும்பச் செலுத்தப் பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை பொது வர்த்தக நோக்கங்களுக்காக ஒதுக்கப்படலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 24, 36, 60 மாதங்களுக்குக் காலாண்டு, ஆண்டு மற்றும் மொத்தமாக வட்டி கிடைக்கும் வகையில் என எட்டு வெவ்வேறு வகைகளில் கடன் பத்திரங்கள் கிடைக்கின்றன.
அதானி எண்டர்பிரைசஸ் மீதான வலுவான முதலீட்டாளர் நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, 2025 ஜூலையில் வெளியிடப்பட்ட முந்தைய ரூ. 1,000 கோடி கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே மூன்று மணி நேரத்தில் முழுமையாக சப்ஸ்கிரைப் ஆகியிருந்தது. நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட், டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்கள் மற்றும் டிப்சன்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை பிரதானமாக முதலீடு செய்திருந்தது.
கடந்த ஆறு மாதங்களாக, அதானி எண்டர்பிரைசஸ் பெரிய அளவிலான திட்டங்களை வெற்றிகரமாக உரிய நேரத்தில் செயல்படுத்தி வருகிறது. நவி மும்பை சர்வதேச விமான நிலையம் 2025 அக்டோபர் 8 அன்று திறக்கப்பட்டு, டிசம்பர் 25 முதல் அங்கு விமானச் சேவை தொடங்கப்பட்டது.. விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக பெரிய AI டேட்டா சென்டர் வளாகம் அமைக்கப்படும் என்று அக்டோபரில் கூகுள் மற்றும் அதானி கனெக்ஸ் கூட்டாக அறிவித்தன.
அதேபோல அதானி எண்டர்பிரைசஸின் சாலைத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025 செப்டம்பரில் நானாசா-பிட்கான் HAM சாலைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. உத்தரகண்ட்டில் சோன்பிரயாக்- கேதார்நாத் கம்பிவடப் பாதை, மற்றும் பீகாரில் இரு சாலைத் திட்டங்கள் (முங்கர்-சுல்தான்கஞ்ச், சுல்தான்கஞ்ச்-சபோர்) உள்ளிட்ட மூன்று புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தக் கடிதங்களையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications