யாரு நான் எடுத்தேனா? பொய்! என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த நடிகை ராக்கி சாவந்த்.. 2வது கணவர் பகீர்
மும்பை: தன்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டியதோடு என்னை ஓரினசேர்க்கையாளராக சித்தரித்தார் என நடிகை ராக்கி சாவந்த் மீது இரண்டாவது கணவர் அடில் கான் துரானி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார் ராக்கி சாவந்த். கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் 2009ஆம் ஆண்டு சுயம்வரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒரே நைட்டில் பிரபலமானார். திருமண வரன்களை தேர்வு செய்யும் இந்த நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் கணவராக தேர்வு செய்யப்பட்டவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரை மணந்து கொண்டார்.

ஆனால் இந்த திருமணம் 2 ஆண்டுகள்தான் நிலைத்தது. அதற்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து முதல் கணவரை 2022 ஆம் ஆண்டு ராக்கி விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து அதே ஆண்டு தன்னை விட 11 வயது குறைந்த அடில்கான் துரானி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ராக்கியின் தாய் புற்றுநோயால் இறக்கும் தருவாயில்தான் ஐசியூவில் ராக்கிக்கும் அடிலுக்கும் திருமணம் நடந்தது.
திருமணமான ஒரே மாதத்தில் தன்னை அடில்கான் அடித்து கொடுமைப்படுத்துகிறார் என ராக்கி புகார் அளித்தார். மேலும் தன் மீது ஆசிட் வீசுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ராக்கி சாவந்தின் கணவர் அடில் கானை மும்பை ஓஷிவோரா போலீஸார் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கணவர் மீதான புகாரை அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது மயங்கி விழுந்தார் ராக்கி சாவந்த் . இதையடுத்து ராக்கியை கைத்தாங்கலாக அழைத்து சென்று காரில் உட்கார வைத்தனர். அந்த வகையில் தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து அடில்கான் பணம் சம்பாதித்தாகவும் ராக்கி புகார் எழுப்பினார்.
இந்த நிலையில் அடில் கான் துரானி மீது மைசூரு வி.வி.புரம் போலீஸ் நிலையத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது கொலை மிரட்டல் விடுப்பதாக ஈரானிய பெண் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கைதான அடில்கான் சில மாதங்களில் விடுதலையானார். அவர் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் 2021 ஆம் ஆண்டு என் நண்பர் மூலம் ராக்கி சாவந்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவருடைய முதல் கணவரை பிடிக்கவில்லை என கூறி என்னுடன் நெருங்கி பழகினார். இதையடுத்து 2022 ஆம் ஆண்டு மே மாதம் நாங்கள் இருவரும் இஸ்லாமிய முறைபடி திருமணம் செய்து கொண்டோம். என்னை திருமணம் செய்து கொண்ட பிறகும் ராக்கி என்னை ஏமாற்றிவிட்டு முதல் கணவருடன் தொடர்பில் இருந்து வந்தார்.
இது எனக்கு தெரிந்தவுடன் நான் அவரிடம் விவாகரத்து கேட்டேன். அவரும் விவாகரத்து கொடுக்க சம்மதித்தார். ஆனால் அவர் பற்றி என்னிடம் இருந்த சில ஆதாரங்களை தருமாறு கேட்டார். இதை வழங்க அவருடைய வீட்டிற்கு சென்றேன். ஆனால் அங்கு போலீஸை வரவழைத்து பொய்யான புகார் அளித்து என்னை சிறைக்கு அனுப்பினார். உண்மையாக அவரை நான் தாக்கவில்லை. அவர்தான் என்னை பலமுறை தாக்கியுள்ளார்.
எனக்கு போதை மருந்து கொடுத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து என் பெயரை கெடுத்துள்ளார். மேலும் நான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என தனி முத்திரை குத்த அந்த வீடியோவை எடுத்துள்ளார். ஈரானிய பெண் என் தோழி. அவருடைய அம்மாவின் மருத்துவ செலவிற்கு நான் பணம் அனுப்பியுள்ளேன். 5 ஆண்டுகளாக அவர் என்னுடன் உறவில் இருந்த நிலையில் நான் எப்படி அவரை பலாத்காரம் செய்ய முடியும். அந்த பெண்ணுக்கு ரூ 3 லட்சம் கொடுத்து ராக்கிதான் இவ்வாறு புகார் கொடுக்க வைத்துள்ளார்.
ராக்கி சாவந்த்தால் என் வாழ்க்கை போய்விட்டது. அவருக்காக ஆட்டோமொபைல் தொழிலில் ஒன்றரை கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளேன். துபாய், கோரேகான் ஆகிய இடங்களில் பிளாட் வாங்கி கொடுத்துள்ளேன். விலையுயர்ந்த பரிசு பொருட்களையும் வழங்கியுள்ளேன். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன என்றார்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications