Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 ஆண்டு பகை.. உத்தவ் - ராஜ் தாக்கரேவை ஒன்றாக்கிய ஹிந்தி எதிர்ப்பு.. மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் எதிரெதிர் துருவங்களாக உள்ள உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே ஆகியோர் இன்று ஒரே மேடையில் ஒன்றாக தோன்றி தோளில் கைபோட்டு கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனித்தனியாக செயல்பட்டு வந்த நிலையில் மகாராஷ்டிராவை ஆளும் பாஜக கூட்டணி செய்த ஒரு செயல் இருவரையும் ஒன்றாக்க உள்ளது. இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா அரசியலில் சகோதரர்களாக இருந்தாலும் கூட எதிரெதிர் துருவங்களாக வலம் வருபவர்கள் தான் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே. முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகன் ஆவார். தற்போது சிவசேனா உடைந்த நிலையில் சிவசேனா (யுபிடி) அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

after-2-decades-uddhav-thackeray-and-raj-thackeray-brothers-to-reunite-for-marathi-cause-at-mega-ra

அதேபோல் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனாவை கட்சியின் தலைவராக இருக்கும் ராஜ்தாக்கரேவின் தந்தை பெயர் ஸ்ரீகாந்த் தாக்கரே. இந்த ஸ்ரீகாந்த் தாக்கரே யார் என்றால் பால் தாக்கரேவின் தம்பி ஆவார். இதன்மூலம் உத்தவ் தாக்கரே - ராஜ்தாக்கரே ஆகியோர் பெரியப்பா - சித்தப்பா மகன்கள் முறையில் சகோதரர்கள் ஆவார்கள்.

மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே வெளியேறினார். சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக கட்சியில் இருந்து வெளியேறிய ராஜ் தாக்கரே சொந்தமாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கடந்த 20 ஆண்டுகளாக உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே ஆகியோர் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர்.

இருவரும் சேர்ந்து செயல்படுவது இல்லை. ஒன்றாக மேடைகளை பகிர்ந்து கொள்வதும் இல்லை. இந்நிலையில் தான் தற்போது முதல் முறையாக இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அதாவது மகாராஷ்டிராவில் மும்மொழி கொள்கையை அம்மாநில அரசு கொண்டு வந்தது. அதில் ஹிந்தியை கட்டாயமாக்கியது. இதற்கு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மும்மொழி கொள்கையால் மராத்தி மொழிக்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறினர். இதையடுத்து மாநில அரசு பின்வாங்கியது.

இருப்பினும் மீண்டும் மும்மொழி கொள்கையை மகாராஷ்டிரா மாநில அரசு கொண்டு வரலாம். இதனால் மராத்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து இன்று காலை 10 மணிக்கு வோர்லியில் உள்ள என்எஸ்சிஐ அரங்கில் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.

இதில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் ஒரே மேடையில் ஒன்றாக ஏறினர். இருவரும் சத்ரபதி சிவாஜியின் போட்டோவுக்கு மாலை அணிவித்து வணங்கினர். அதன்பிறகு இருவரும் தோளில் கைகோட்டு அரங்கில் இருந்தவர்களை கைக்கூப்பி வணங்கினர்.

இவர்கள் 2 பேரும் இப்படி ஒன்றாக சேர்வது 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. இந்த பேரணி, கூட்டத்தில் மராத்தி எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ், சரத்பவாரின் கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.

மகாராஷ்டிரா அரசியலில் எதிரெதிராக இருந்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ்தாக்கரே ஆகியோர் மராத்தி மொழிக்காக ஒரே மேடையில் ஒன்றாக இணைந்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சிவசேனாவை ஏக்நாத்ஷிண்டே தனியாக பிரித்து சென்றுவிட்டார்.

இதனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி 20க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல் ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து இருப்பது என்பது மகாராஷ்டிரா அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+