ரத்த ஓட்டத்தை கட் செய்யும்.. "எலும்பு மரணம்.." கொரோனாவிலிருந்து மீண்டவர்களை தாக்கும் புது வகை நோய்
மும்பை: கொரோனா பாதித்து மீண்ட சில நோயாளிகளுக்கு எலும்புக்கு ரத்த ஓட்டம் ரத்தாகும் புதிய வகை நோய் தாக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
avascular necrosis என்று இந்த நோய்க்கு பெயர். இந்த நோய் தாக்கினால், எலும்பு திசுக்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் நின்று போனால், எலும்புகள் இறந்து போய்விடும். அதாவது செயலிழந்து போய்விடும்.
மாஹிம் பகுதியிலுள்ள, இந்துஜா மருத்துவமனையில், கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மூன்று 40 வயதுக்குட்பட்ட நோயாளிகளுக்கு இதுபோன்ற பாதிப்பு பதிவாகியுள்ளது.

தொடை எலும்பில் வலி
"இந்த நோயாளிகளுக்கு அவர்களின் தொடை எலும்பில் வலி ஏற்பட்டது, அவர்கள் மருத்துவர்களாக இருந்ததால், அறிகுறிகளை அடையாளம் கண்டு சிகிச்சைக்கு விரைந்தனர்," என்று மாஹிம், இந்துஜா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சஞ்சய் அகர்வாலா தெரிவித்துள்ளார்.

ஸ்டீராய்டு செலுத்துவதால் பக்க விளைவு
கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை போன்றுதான் இதுவும். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் அல்லது கொரோனா சிகிச்சையில் இருக்கும்போது எலும்பு மரண நோய் பாதிப்பு ஏற்படுகிறது. கருப்பு பூஞ்சை பரவி கண் பார்வையை இழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதேபோன்றுதான் எலும்பு நோய் பரவுவதாகவும் கூறப்படுகிறது. ஸ்டீராய்டு சிகிச்சை வழங்கப்படுவதால் பக்க விளைவாக இது ஏற்படுகிறதாம். ரெம்டெசிவர் போன்றவை ஸ்டீராய்டு வகையைச் சேர்ந்த மருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் கருப்பு பூஞ்சை பாதிப்பு
இதற்கிடையில், கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில், மியூகோமிகோசிஸ் (கருப்பு பூஞ்சை) நோயால் பாதிக்கப்பட்ட 264 நோயாளிகளில் 30 பேர் ஒரே கண்ணில் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அனுமதிக்கப்பட்ட அனைவருமே 110 விஷன் அறுவை சிகிச்சையுடன் எண்டோஸ்கோபிக்கு உட்படுத்தப்பட்டதாக மருத்துவமனை டீன் டாக்டர் என் நிர்மலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சை மருந்து
கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட 30 நோயாளிகள் ஒரு கண்ணில் பார்வை இழந்துவிட்டனர், ஆரம்ப கட்டத்தில் வந்தவர்களுக்கு, இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்தியதாக அவர் கூறினார். இதனிடையே, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் (யூ.டி.) மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு ஆம்போடெரிசின்-பி மருந்தாக, 2,12,540 குப்பிகளை அரசு ஒதுக்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா சமீபத்தில் தெரிவித்தார். கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க ஆம்போடெரிசின்-பி பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications