ஹிஜாப், புர்காவுக்கு தடை! தனியார் கல்லூரி உத்தரவால் சர்ச்சை.. மும்பையில் மாணவிகள் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: கர்நாடகா கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அதேபாணியில் மும்பையில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகம் உத்தரவு போட்டுள்ளது. இதையடுத்து மாணவிகள், பெற்றோர்கள் கொதித்தெழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை செம்பூரில் தனியாருக்கு சொந்தமான கலை, அறிவியல் மற்றும் காமர்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நேற்று வழக்கம்போல் வந்தனர்.

After Karnataka, Mumbai Colleges bans entry to girl students wearing Hijab and Burqas

அப்போது இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப், புர்கா அணிந்திருந்தனர். இதையடுத்து அந்த உடையுடன் அவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் கல்லூரி வாசலில் நின்றனர்.

மேலும் சம்பவம் குறித்து அவர்கள் தங்களின் பெற்றோருக்கு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கல்லூரிக்கு வந்தனர். இதையடுத்து மாணவிகள், பெற்றோர்கள் கல்லூரியில் போராட்டத்தை நடத்தினர். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் பரவவே அங்கு கூட்டமும் கூடியது. இதனால் அங்கு சில நிமிடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுது்து போலீசார் அங்கு வந்து போராட்டம் நடத்திய பெற்றோர்களிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வேளையில், கல்லூரியில் ஆடை கட்டுப்பாட்டு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹிஜாப், புர்காவுடன் மாணவிகள் கல்லூரி வர அனுமதியில்லை என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் வித்யா கவுரி லிலி கூறுகையில், ‛‛கல்லூரியில் மே மாதம் 1ம் தேதி மாணவிகளின் பெற்றோருடன் மீட்டிங் நடந்தது. அப்போது புதிய ஆடை கட்டுப்பாட்டு கொள்கை பற்றி விவாதிக்கப்பட்டது. புர்கா, ஹிஜாப், ஸ்கார்வ்ஸ், ஸ்டீக்கர்கள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது பற்றி எடுத்து கூறினோம். அப்போது அனைவரும் ஆடை கட்டுப்பாட்டு முறைக்கு ஒப்புக்கொண்டனர். இப்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' என்றார்.

இந்த வேளையில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில், ‛‛தங்களின் மத நம்பிக்கையின்படி ஹிஜாப், புர்கா அணிந்து வருகிறோம். இதனை காலம்காலமாக பின்பற்றி வருகிறோம். இப்போது திடீரென்று ஹிஜாப், புர்கா அணியாமல் கல்லூரி வர வேண்டும் என்றால் என்ன செய்வது? என தெரியவில்லை. அட்லீஸ்ட் ஸ்கார்வ்ஸ் அணிய அனுமதிக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

After Karnataka, Mumbai Colleges bans entry to girl students wearing Hijab and Burqas

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மாலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியானது. அதில் ‛‛ கல்லூரி வரும் மாணவ-மாணவிகள் ஹிஜாப், புர்கா, ஸ்கார்வ்ஸ் அணிந்து வரலாம். ஆனால் கல்லூரிக்குள் நுழைந்தவுடன் அதனை மாற்றிவிட்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக கடந்த ஆண்டு கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பல இடங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் நேற்று மும்பையில் உள்ள கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+