மம்தாவை போல் உத்தவ் தாக்கரேவிற்கு அடுத்த அடி.. பாஜக பக்கம் போகும் 5 எம்பிக்கள்?
மும்பை: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 எம்பிக்கள் தனி அணியாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் அடுத்ததாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ((யுடிபி) கட்சியை சேர்ந்த 5 எம்பிக்கள் பாஜகவின் பக்கம் போக உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே. கடந்த 2022ம் ஆண்டில் சிவசேனா 2 அணியாக பிரிந்தது. அப்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவிற்கு ஆதரவாக சென்றனர். மேலும் உண்மையான சிவசேனா நாங்கள் தான் என்று அவர்கள் உரிமை கோரினார். இதையடுத்து சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது.
கட்சியை இழந்த உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். தற்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணிக்கு மொத்தம் 20 எம்எல்ஏக்கள் உள்ளனர். லோக்சபாவில் 9 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 2 எம்பிக்களும் உள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது லோக்சபாவில் உத்தவ் தாக்கரேவிற்கு உள்ள 9 எம்பிக்களில் 7 பேர் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது சமீபத்தில் உத்தவ் தாக்கரே தனது 'மாதோஸ்ரீ' இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் லோக்சபாவில் உள்ள 9 எம்பிக்களில் 5 எம்பிக்கள் பங்கேற்கவில்லை. 4அரவிந்த் சாவந்த், அனில் தேசாய், சஞ்சய் தினா பாட்டீல், ராஜாபாவ் வாஜே ஆகிய நான்கு பேர் மட்டுமே நேரில் பங்கேற்றனர். சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், ஓம்ராஜே நிம்பால்கர், பாவுசாகேப் வக்சவ்ரே மற்றும் நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய 5 எம்பிக்கள் பங்கேற்கவில்லை. அதற்கு முன்பாக உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவின் பிறந்தநாள் விழாவிலும் இந்த ஐந்து எம்பி-க்களும் பங்கேற்று வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் தான் இவர்கள் 5 பேரும் அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாகதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இதுபற்றி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படும் எம்பியான பாவுசாகேப் வக்சவ்ரே கூறுகையில், ''நான் உத்தவ் தாக்கரேவுடன் இருக்கிறேன். நாளை என்ன நடக்கும் என்று என்னிடம் கேட்காதீர்கள்'' என்றார். அதேவேளையில் இந்த தகவலை உத்தவ் தாக்கரே தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. ஆலோசனை கூட்டத்தின்போது எம்பிக்கள் 5 பேர் பங்கேற்கவில்லை என்பதில் உண்மையில்லை. அவர்கள் டெல்லியில்இருந்ததால் ஆன்லைன் வழியாக பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 5 எம்பிக்களும் உத்தவ் தாக்கரே மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் 22 பேர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். லோக்சபாவில் மொத்தம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்பிக்கள் உள்ளனர். இதில் 22 பேர் மம்தா பானர்ஜி தலைமையின் மீது அதிருப்தியாகி தனி அணியாக மாறி உள்ளனர்.
இவர்கள், இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியாக (Nationalist Citizen Party of India or NCPI) செயல்பட்டு வருகின்றனர். இது திரிபுராவை மையப்படுத்தி செயல்பட்டு வரும் தனி கட்சியாகும். தற்போது இந்த 22 எம்பிக்களும் பாஜகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். மம்தா பானர்ஜியின் கட்சியை தொடர்ந்து தற்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணியின் 5 அதிருப்தி எம்பிக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications