ஐஸ்வர்யா ராய் காரில் மோதிய பஸ்.. மும்பை சாலையில் பரபரப்பு! என்ன ஆச்சு? ஷாக் ஆன ரசிகர்கள்!
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது இன்று பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மும்பையில் இன்று ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் ஒரு பேருந்தில் மோதியுள்ளது. அவரது மெய்க்காப்பாளர்கள் நிலைமையை கண்டு காரை விட்டு வெளியே வந்தனர். இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, காருக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு சிறிய விவாதத்திற்குப் பிறகு, அங்கிருந்து கார் புறப்பட்டது.

'5050' என்ற பதிவு எண்ணைக் கொண்டது ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார். அதன் மூலம் இன்று பேருந்துடன் மோதியது ஐஸ்வர்யா ராயின் கார் என்பது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள், ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என கவலையுடன் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தின் போது நடிகை ஐஸ்வர்யா ராய், காரின் உள்ளேயோ அல்லது வெளியேயோ தென்படவில்லை. எனவே விபத்தில் சிக்கியபோது அவர் காரில் இருந்தாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இப்படி ஒரு விபத்து நடக்கவில்லை என்றும் சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜூஹுவைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி, பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்துக் கொண்டிருந்ததால், கார் ஓட்டுநர் வாகனத்திலிருந்து இறங்கி, ஏன் ஹாரன் அடிக்கிறார் என்று கேட்டார். எந்த விபத்தும் நடக்கவில்லை எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அசுதோஷ் கோவரிகரின் மகன் கோனார்க் கோவரிகரின் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சனும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக கலந்து கொண்டனர். இந்த பிரமாண்டமான கொண்டாட்டத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications