சித்தப்பா ஸ்டைலில் அரசியல் செய்யும் அஜித் பவார்.. பரபரக்கும் மகாராஷ்டிரா! அடுத்த சிஎம் யார்?
மும்பை: மகாராஷ்டிர தேர்தலில் 132 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. அங்கும் யார் முதல்வர் என்பதில் சிறு குழப்பம் எழுந்துள்ள நிலையில், இப்போது அங்கே கிங் மேக்கராக அஜித் பவார் மாறியிருக்கிறார். அவர் என்ன முடிவை எடுத்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு நேற்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உள்ளது.

யார் முதல்வர்: அதேநேரம் அங்கு யார் முதல்வர் என்பதில் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸை முதல்வராக்க வேண்டும் என்பதில் அஜித் பவார் கவனமாக இருப்பதாகவும் அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருவதாகவும் மும்பை அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். அஜித் பவார் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தே ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அங்குப் போட்டியிட்ட சுமார் 91% இடங்களில் பாஜக வென்றுள்ளது. பெரும்பான்மைக்கும் கூட இன்னும் 13 இடங்கள் மட்டுமே தேவை. இதனால் பாஜக தலைவர்கள், குறிப்பாக பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஷிண்டே: இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியான சனிக்கிழமையே ஏக்நாத் ஷிண்டே தான் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது. பெண்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை தரும் "லட்லி பெஹ்னா" திட்டத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்ததாகவும் அதுவே பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பதிவு செய்யக் காரணமாக இருந்ததாகவும் சொல்லி முதல்வர் பதவிக்கு உரிமை கோரினார். இதனால் பாஜக கூட்டணியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
இப்படியொரு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியான அஜித் பவார் எடுக்கும் நிலைப்பாடு முக்கியமானதாக மாறியது. இந்தச் சூழலில் தான் அவர் ஃபட்னாவிஸுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் பவார்: கடந்த 2019 மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- ஒருங்கிணைந்த சிவசேனா- ஒருங்கிணைந்த என்சிபி இணைந்து ஆட்சியை பிடித்தது. அப்போதே அஜித் பவார் வசம் தான் முக்கிய பொறுப்புகள் இருந்தது. அப்போது முதல்வராக இருந்த தாக்ரே அடிக்கடி கோயில்களுக்கு சென்றுவிடுவார். இதனால் அரசு நிர்வாகம் எல்லாம் துணை முதல்வர் என்ற முறையில் அஜித் பவார் வசம் தான் இருக்கும். இறுதி முடிவை தாக்கரே தான் எடுப்பார் என்ற போதிலும் அஜித் பவாருக்கு நல்ல அதிகாரம் இருந்தது.
இப்போது அஜித் பவார் பாஜக கூட்டணியில் இருக்கிறார். அப்போது இருந்த அளவுக்கு அதிகாரம் இல்லை. இந்தச் சூழலில் மீண்டும் இங்க தன்னை போலவே ஒரு பிராந்திய கட்சியைத் தலைமை தாங்குவோருக்கு முதல்வர் பதவி போனால் தனது அதிகாரம் மேலும் குறையும் என அஜித் பவார் நினைக்கிறார். மேலும், வரும் காலத்தில் கட்சியை விரிவுபடுத்துவதும் கடினம். இதன் காரணமாகவே அவர் தேசிய கட்சியான பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு ஆதரவு அளிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு முதல்வர் பதவி போனால், ஷிண்டேவுக்கும் தனக்கும் ஒரே போல துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று பவார் கணக்குப் போடுகிறார்.
ஏக்நாத் ஷிண்டேவால் பாஜக மற்றும் என்சிபி என இரு கட்சிகளின் ஆதரவு இல்லாமல் முதல்வராக முடியாது. ஆனால், பாஜகவுக்கு என்சிபி ஆதரவு மட்டுமே இருந்தால் கூட போதும். எனவே மகாராஷ்டிர அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications