Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் களத்தில் பரம எதிரி.. ஆனாலும் அஜித் பவார் மரணம் கேட்டு கண்ணீர்விட்ட தலைவர்.. பேசக் கூட முடியல

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரத் துணை முதல்வர் அஜித் பவார் (Ajith Pawar death) விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு, அவரது கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்களும் கூட கண்ணீர் விட்டனர்.

மகாராஷ்டிரத் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவருமான அஜித் பவாரின் விமானம் இன்று விபத்தில் சிக்கியது. காலை 8 மணியளவில் மும்பையிலிருந்து கிளம்பிய விமானம், பாராமதி அருகே தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. அதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Ajith Pawar plane crash Even Opponent leader can t control tears hearing NCP chief sudden demise

மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற விமானம், இன்று காலை விபத்துக்குள்ளானதில் அவர் உள்பட ஐந்து பேர் பலியாகினர். பைலட் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

என்சிபி அலுவலகம்

அஜித் பவார் விபத்து செய்தி வருவதற்கு முன்பு வரை என்சிபி கட்சி அலுவலகம் இன்று காலை வழக்கம் போலவே இருந்தது. சில தலைவர்கள் கட்சிப் பணிகளுக்காக அங்கு வந்திருந்தனர். அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் விமான விபத்து குறித்து தகவல் கிடைத்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த என்சிபி நிர்வாகிகள், அஜித் பவார் உடல்நிலை குறித்து பிரார்த்தனை செய்தனர்.

விமான விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பே அடுத்த அதிர்ச்சி வந்தது.. விபத்தில் அஜித் பவார் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வந்தவுடன் நிர்வாகிகள் உடைந்து போனார்கள். கட்சி அலுவலகங்களில், என்சிபி தொண்டர்களும் மூத்த தலைவர்களும் கண்ணீர்விட்டனர். பலர் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த காட்சிகள் வெளியாகின. அஜித் பவார் மரணம் குறித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்ததாகவும் இதில் வார்த்தைகளே இல்லை என்றும் என்சிபி எம்.பி. பிரபுல் படேல் தெரிவித்தார்.

அனில் தேஷ்

என்ன தான் சரத் பவாரிடம் இருந்த கட்சியை அஜித் பவார் தனதாக்கிக் கொண்டாலும் கூட இன்னுமே சரத் பவார் தரப்பில் இருக்கும் பல மூத்த தலைவர்களுடன் அஜித் பவார் நல்லுறவையே கொண்டிருந்தார். அஜித் பவார் இந்த மரணம் சரத் பவார் தரப்பையும் உலுக்கிவிட்டது என்பதே உண்மை. சரத் பவார் ஆதரவு தலைவரான அனில் தேஷ்முக் பிரஸ் மீட்டில் கண்ணீர்விட்டுக் கதறினார்.

பேச கூட முடியல

அஜித் பவார் மரணத்தைத் தொடர்ந்து நாக்பூரில் சரத் பவார் தரப்பின் மூத்த தலைவரும் மஹாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அஜித் பவாரின் மறைவுச் செய்தியைக் கேட்டுப் பெரிதும் அதிர்ச்சியடைந்தார். பேசவே முடியாமல் கண்ணீர்விட்டார். பிறகு கர்சீப் எடுத்து கண்ணீரைத் துடைத்துவிட்டுப் பேச முயன்றார். கண்ணீரைக் கட்டுப்படுத்திவிட்டு, ஓரிரு முறை பேச முயன்றபோதிலும் அவரால் பேச முடியவில்லை. அழுகையைக் கட்டுப்படுத்த முடியாததால் செய்தியாளர் சந்திப்பை அப்படி முடித்துவிட்டு கண்ணீருடன் எழுந்து சென்றார்.

எதிர்க்கட்சி தலைவர்கள்

அதேபோல மற்றொரு எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பியான பிரியங்கா சதுர்வேதியும் டிவி நேர்காணலின்போது கண்ணீர்விட்டார். அஜித் பவார் மரணம் மனதை உலுக்குவதாகவும் மிகவும் வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இது மாநிலத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்று கூறிக் கண்ணீர்விட்டார். மாநிலத்தின் வளர்ச்சி சிறந்த யோசனைகள் அஜித் பவாரிடம் இருந்ததாகவும், மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார் என்றும் தெரிவித்தார்..

அஜித் பவார் மரணத்திற்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முதல்வர் பட்னாவிஸிடம் விபத்து குறித்துக் கேட்டறிந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+