ஓமிக்ரான் எதிரொலி.. வெளிநாடுகளில் இருந்து திரும்பியோர் அலட்சியம்.. 100 மேற்பட்ட பயணிகள் மாயம்
மும்பை: ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பலர் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது ஓமிக்ரான் கொரோனா தான். தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ.25ஆம் தேதி முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனாவை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் பல புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இருப்பினும், இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா பரவியுள்ளது..

இந்தியாவில் கட்டுப்பாடுகள்
இந்தியாவிலும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிட்டுள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு 15 நாட்கள் கட்டாய தனிமை, 2 முறை கொரோனா சோதனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதர நாடுகளில் இருந்து வருவோருக்கும் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளில் சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உருமாறிய கொரோனா குறித்துக் கண்டறிய சில வாரங்களாவது ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் ஓமிக்ரான்
இந்தியாவிலும் இதுவரை 21 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் பெங்களூருவில் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் உறுதியானது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. சில நாட்களில் மட்டும் இந்தியாவில் 21 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மாயம்
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும். வெளிநாடுகளில் இருந்து திரும்புவோரின் அலட்சிய நடவடிக்கைகளால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட கல்யாண் டோம்பிவிலி என்ற நகரில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் 100க்கும் மேற்பட்டோரைக் கண்டறிய முடியவில்லை. இந்த கல்யாண் டோம்பிவிலி பகுதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன் அம்மாநிலத்தின் முதல் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுட்விச் ஆப்
இது குறித்து கல்யாண் டோம்பிவிலி முனிசிபல் தலைவர் விஜய் சூர்யவன்ஷி கூறுகையில், "சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 295 பேரில் 109 பேரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களில் சிலரது மொபைல் போன்கள் சுட்விச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலர் கொடுத்திருந்த முகவரிகளில் இருக்கும் வீடுகள் பூட்டப்பட்டிருந்தது
Recommended Video

பூட்டியிருக்கும் வீடுகள்
ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும். 8ஆம் நாள் அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்படும். அதில் நெகடிவ் என முடிவு வந்தாலும் கூட மீண்டும் ஒரு வாரம் அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். தனிமை காலத்தில் அவர்கள் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. அதையும் நாங்கள் கண்காணிக்கிறோம். இங்கு 72 சதவீதம் பேர் ஒரு டோஸ் வேக்சின் போட்டுள்ளனர். 52 சதவீதம் பேர் முழுமையாக 2 டோஸ் வேக்சின் போட்டுள்ளனர்" என்றார். கொரோனா முதலில் நாட்டில் பரவ தொடங்கிய போதும், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் இதேபோல அலட்சியமாக மயமானது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications