ஆக்ஸிமீட்டருடன் டாக்டர் வந்துட்டாரா.. ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க.. அமிதாப் செய்த காரியத்தை பாருங்க!
மும்பை: ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் வழிகள் குறித்து அறிவுரை கூறிய அமிதாப் பச்சன் கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் போட்டியாளரை சிரிக்க வைத்தார்.
பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தற்போது கவுன் பனேகா குரோர்பதி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை 78 வயதான அமிதாப் தொகுத்து வழங்குவதாலும் அவர் வேடிக்கையாக பேசுவதாலும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகிறது. நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் எந்தவித பதற்றமும் அடையாமல் இருக்க பச்சன் அவர்களுடன் தங்கள் வாழ்க்கையை பற்றி பேசுகிறார்.

நிகழ்ச்சி
அந்த வகையில் அர்பனா வியாஸ் என்பவர் வேகமாக பதிலளித்து முதல் கேள்விக்கு சரியான பதிலை அளித்து ஹாட் சீட்டில் அமர்ந்தார். திக்கு வாயால் அவதிப்பட்டு வந்த அர்பனா தனது தந்தையுடன் இருந்து வருகிறார். அவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரூ 3000 வென்றார்.

ஆக்ஸிஜன்
அப்போது அமிதாப் பச்சன், அர்பனாவிடம் ஆக்ஸிஜனை பரிசோதித்தாரா என கேட்டார். அதற்கு அர்பனா, அவரது ஆக்ஸிஜனுக்காக ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டரை பயன்படுத்தி எடுத்ததாகவும் அது 95- 96 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து பச்சன் கூறுகையில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பது எப்படி என்பது எனக்கு தெரியும் என்றார்.

அமிதாப் மருத்துவமனை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் மருத்துவமனையில் இருந்த அனுபவத்தை பகிர்ந்தார். மருத்துவமனையில் ஊழியர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆக்ஸிஜன் அளவை சோதிப்பார்கள். அப்போது முதலில் ஆக்ஸிஜனின் அளவு 92- 93 சதவீதமாக இருந்தது. மேலும் நான் குணமடைய வேண்டுமானால் ஆக்ஸிஜனின் அளவு 98% இருக்க வேண்டும் என மருத்துவர் கூறியிருந்தார்.

மருத்துவர்கள்
ஆகையால், மருத்துவர்கள் ஆக்ஸிமீட்டரை கொண்டு வந்தாலே போதும், அந்த இலக்கு 98 ஐ அடைய ஆழ்ந்த மூச்சை இழுப்பேன் என அமிதாப் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. அமிதாப் எப்போதும் தன்னை சுற்றியிருப்பவர்களை கலகலப்பூட்டும் வகையில் பேசுவது வழக்கமாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications